வட்டி விகிதத்தில் உயர்வு!! மக்களின் கதி??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட்டி விகிதத்தில் உயர்வு!! மக்களின் கதி??
ஜூலை 30ல் வெளிவர இருக்கும் இந்திய ரிசர்வங்கியின் மானிட்டரி பாலிசியை பொருளாதார வல்லுனர்களும், ஆய்வாளர்களும் வெகு ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இந்திய ரிசரவ் வங்கியோ, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகித்தை (எம்எஸ்எஃப்) 10.25 சதவீதம் அளவிற்கு உயர்த்தி அனைவரையும் கலங்கடித்திருக்கிறது. இந்த புதிய வட்டி விகிதம், மக்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகித்தை உயர்த்துவதற்கு மறைமுகமாக வழிவகுக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் எம்எஸ்எஃப் கீழ் வரும் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி ரேப்போ அடிப்படையில் ப்ளஸ் 1 சதவீதத்தில் அதாவது 8.25 சதவீதத்தில் கடன் வழங்குகிறது. ஆனால் தற்போது இந்த வட்டி விகிதத்தை 10.25 சதவீதம் அளவிற்கு உயர்த்தி இருப்பதால், வங்கிகள் 2 சதவீத வட்டியை கூடுதலாக ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

இதன் மூலம் வட்டி விகிதம் அதிகமாகும் என்று தெரிகிறது. ரேப்போ ரேட்டை பாதிக்காமல், இந்த வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி அதிகரித்திருப்பது, மறைமுகமாக வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் என்று வங்கிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

எனினும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமான அளவு உயரும் என்பதற்காவே ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது என்று வங்கிகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிடவில்லை என்பதை உறுதி செய்ய முடியும் என்று அவை தெரிவிக்கின்றன.

தற்போது சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் வங்கிகளுக்கு கடன் வழங்குவதிலும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி வகுதித்திருக்கிறது. அதாவது வங்கிகளின் 1 சதவீத நெட் டிமான்ட் அன்ட் டைம் லையபிலிட்டிஸ் (என்டிடிஎல்) அடிப்படையில் ரூ.75,000 கோடி கடன் வழங்க முடிவெடுத்திருக்கிறது. இந்த தொகையிலிருந்து தனிப்பட்ட வங்கிகளின் வங்கிச் செயல்பாடுகள் மற்றும் அதன் நம்பகத் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப கடன் தொகை வழங்கப்படும். இந்த புதிய விதிமுறை ஜூலை 17, 2013 முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் ஜூலை 18, 2013 அன்று ஓபன் மார்க்கெட் சேல்ஸ் ஆஃப் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா செக்யூரிட்டிஸை ரூ.12,000 கோடி அளவிற்கு நடத்த இருக்கிறது.

எனவே இனிமேல் வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதனால் வரும் காலங்களில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Loans to get costlier as RBI hikes MSF to prevent rupee fall

While economists and analysts were focusing on what the RBI would do in its forthcoming Monetary Policy on July 30, the Indian central bank stunned markets by hiking the marginal standing facility for banks (MSF) to 10.25%, indirectly pushing interest rates higher.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X