நிதி திட்டங்களின் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல போன்சி (Ponzi) நிதி திட்டங்களின் அச்சுறத்தல் அதிகமாகி கொண்டிருப்பதால் , இதை ஒழுங்குமுறைப்படுத்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வரும் என்று நிதி அமைச்சர்ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

"ஒழுங்குமுறைப்படுத்தலில் உள்ள பிளவை சரி செய்ய புதிய சட்டம் கொண்டு வர தீவிரமாக யோசித்து வருகிறோம். இந்த பிளவை கொண்டு யாரும் பலனை அனுபவிக்க முடியாத படி நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்," என்று கூறியுள்ளார்.

நிதி திட்டங்களின் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம்!!

இப்போதுள்ள சட்டத்தின் படி அரசாங்க துறை அல்லது முறைப்படுத்தும் துறைகளின் கண்களுக்கு படாதபடி எந்த ஒரு நிறுவனமும் விதிமுறைக்கு மாறான முதலீட்டு திட்டங்களை தொடங்களாம், இதை மாற்றி அமைக்க முயற்சித்து வருகிறோம், என்றும் "தற்போது, உங்கள் நிறுவனத்தை என்.பி.எஃப்.சி. அல்லது சிட் ஃபண்ட் அல்லது முறைபடுத்தப்பட்டுள்ள நிறுவனம் என்று எந்த ஒரு வகையிலும் சேர்க்காமல், உங்கள் நிதி தொழிலை சுலபமாக செய்ய வழிகள் இருக்கின்றன," என்று சிதம்பரம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

"இவைகள் எல்லாம் இத்திட்டத்தில் உள்ள பிளவுகள் ஆகும். இவ்வகை பிளவுகளை முடிந்த வரையில் குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அனைவருமே ஆர்.பி.ஐ. (RBI) அல்லது செபி (SEBI) அல்லது பதிவாளர் அல்லது சிட்ஸ் அல்லது மாநில அரசாங்கம் என்று ஏதுனும் ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள்," என்றும் அவர் கூறியுள்ளார்.

செபி (SEBI), சட்டம் மற்றும் இதர கட்டுப்பாடுகளில் பல சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. பல வகையான முதலீட்டு திட்டங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முதலீட்டுச் சந்தையை கட்டுப்படுத்தும் துறைகளுக்கு அதிக அளவிலான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்த சட்டத் திருத்தங்களுக்கு அரசாங்கம் அவசர கால சட்டம் கொண்டு வருமா என்று கேட்டதற்கு, திரு.சிதம்பரம் கூறுகையில் "நாங்கள் ஒரு சட்டத்தை கொண்டு வர ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அது எவ்வகையில் உருவம் பெரும் என்று இத்தருணத்தில் கூற முடியாது. பல காரணிகளுக்கு மத்தியில், எப்போது நாடாளுமன்றம் கூடுகிறதோ அதை பொறுத்து தான் இதை தீர்மானிக்க முடியும்."

முன்மொழியப்பட்ட பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா (2013), காபினெட் குறிப்பில் சேர்க்கப்பட்டு, நிதி அமைச்சகத்தில் உள்ள பல துறைகளுக்கு பொருளாதார அலுவல்கள் துறையால் அனுப்பி வைத்துள்ளது. இதே போல் கார்பரேட் அலுவலகங்கள், உள்துறை அமைச்சகம், சட்டதுறை அமைச்சகம், தொலை தொடர்பு துறை அமைச்சகம், ரிசர்வ் பேங்க் ஃஆப் இந்தியா, திட்டமிடும் ஆணைக்குழு மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு தேடுதலுக்கும், கைப்பற்றுகைக்கும் சொத்துக்களை முடக்கவும் செபிக்கு (SEBI) முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போன்சி திட்டங்கள் மற்றும் மற்ற முறைகேடான செயல்களை தடுக்க இவ்வகை அதிகாரத்தை செபிக்கு வழங்கினால் தான் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பங்கு பரிமாற்றங்களில் உள்ள முறைகேட்டை கண்டுபிடிக்க எந்த ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்தின் தொலைபேசி பில்லின் விவரங்களை சேகரிக்க செபிக்கு (SEBI) அதிகாரம் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

ஆம்வே போன்ற மல்டி-லெவல் மார்கெடிங் நிறுவனங்களை பற்றி பேசும் போது, நம்பகத்தனமான நிறுவனங்களின் நன்மைக்காக இவ்வகை நிறுவனங்களின் செயல்பாட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

ஆம்வே இந்திய நிறுவனத்தின் தலைவர் மற்றும் கேரளாவை சேர்ந்த இரண்டு இயக்குனர்களின் கைதை மனதில் வைத்து, "முறைகேடான பண புழக்கத்தில் ஈடுபடாத முறையான மல்டி-லெவல் மார்கெடிங் நிறுவனங்களின் நன்மைக்காகவும் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்." என்று அவர் கூறியுள்ளார்.

"இப்போதிருக்கும் சட்டத்தின் படி, சில மல்டி-லெவல் மார்கெடிங் திட்டங்கள் முறைகேடானவையாகும். நீதிமன்றம் தற்போதைய சட்டத்தின் படி, இந்நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று கூறியுள்ளதால், அது சரியோ தவறோ, மாநில காவல்துறை அந்த கண்ணோட்டத்தோடு இதை பார்க்கிறது" என்றும் கூறியுள்ளார்.

ஆர்.பி.ஐ (RBI) மற்றும் செபி (SEBI) போன்ற அமைப்புகளுக்கு தலைமை வகிப்பவர்களின் பதவிக்காலம் அதிகமாக இருக்குமா என்று கேட்டதற்கு, "தனிப்பட்ட முறையில் பதவிக்காலம் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன். ஐந்து வருடமாக பதவிக்காலம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்." என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ponzi menace: Govt considering new law to plug regulatory gaps

Concerned over the rising menace of ponzi schemes, the government will bring in a new law to remove regulatory gaps in this regard, Finance Minister P Chidambaram has said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X