2008க்கு பின் குறைவான மதிப்பை தொட்ட பிஎஸ்இயின் டாப் 500 நிறுவனங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2008க்கு பின் குறைவான மதிப்பை தொட்ட பிஎஸ்இயின் டாப் 500 நிறுவனங்கள்!!
பிஎஸ்இ 500 குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் கிரெடிட் அளவுகள் குறைந்துள்ளது, அதாவது பட்டியலிடப்பட்ட முதல் 500 நிறுவனங்களின் கிரெடிட் குறியீடு மிகக் குறைந்த அளவை தொட்டு விட்டது. இந்த நிறுவங்களின் கிரெடிட் குறியீடு 2008ம் ஆண்டிற்கு பிறகு இப்பொழுதுதான் மிகக் குறைந்த மற்றும் அபாயமான கட்டத்தை எட்டியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கிரெடிட் குறியீடு ஒரு நிறுவனத்துன் வலிமையான நிலையை காட்டுகிறது. பிஎஸ்இ 500 நிறுவனங்களின் கிரெடிட் குறியீடு ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் இதில் கவலை தரும் ஒரு முக்கிய விஷயம், கிரெடிட் குறியீடு உயர்ந்த அளவிற்கு ரொக்க கையிருப்பு உயரவில்லை. நாட்டின் பொருளாதார நிலையை சுற்றி கரும் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த நிலையில், இந்த நிறுவனங்களின் கிரெடிட் குறியீடுகளில் மாற்றம் ஏற்படுவது சந்தேகமே. மேலும் இந்த சூழ்நிலை குறைந்த பட்சம் வரும் நிதியாண்டிலும் (FY'14) தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2008 நிதியாண்டில் இருந்து 2013 நிதியாண்டு வரை, இந்த நிறுவனங்களின் கிரெடிட் அளவு சுமார் 192 சதவீதமும், அதே கால கட்டத்தில் வட்டி செலவினம் சுமார் 226 சதவீதமும் உயர்ந்துள்ளதாக இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.

 

தற்போதைய வணிக சூழலானது 2001-03 நிதியாண்டுகள் மற்றும் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் நிலவிய சூழ்நிலையை விட மிக மோசமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. தற்பொழுது உள்ள சூழ்நிலையானது அதிக சவால்கள் மற்றும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

"தற்போதைய பொருளாதார நிலைமை, வட்டி விகிதங்களை குறைப்பது சம்பந்தமாக மிகக் குறைந்த அளவு வாய்ப்புகளையே இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்குகின்றது. மேலும் தற்போதைய நிலைமையை கணக்கில் கொள்ளும் போது இந்திய அரசாங்கம் மிகப் பெரிய அளவிலான கொள்கை மாற்றங்களை முன்னெடுப்பதும் சந்தேகமே", என இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில் நிறுவனங்களின் செயல்பாடுகள், அவர்களுடைய வலிமையான இருப்புநிலை, அதிக அளவு பண வரவுகளை உருவாக்கும் திறமை, மற்றும் பண கையிருப்பு போன்றவற்றை சார்ந்துள்ளது, என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2012 வரையிலான நிதியாண்டுகளில் நிறுவனங்களின் கிரெடிட் அளவு சராசரியாக 20 சதவீதம் வளர்ந்து வந்துள்ளது. ஆனால் 2013ம் நிதியாண்டில் இது சுமார் 10 சதவீத அளவிலேயே இருந்தது. இதற்கு இந்த நிறுவங்களின் குறைந்து வரும் முதலீட்டை செலவலிக்கும் திறம் மற்றும் வங்கிகளின் சில துறைகளின் மீதான வெறுப்பு போன்றவை காரணமாக கூறப்படுகின்றன.

மேலும் அறிக்கையின் அடிப்படையில் நாம் முன்னோக்கி செல்லும் பொழுது, இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறிக்கைக் குறியீடுகள், ஒரு வளமான எதிர்காலத்தை சுட்டிக் காட்டவில்லை. ஏனெனில், இந்த நிறுவனங்கள் தற்பொழுது வாங்கும் கடனானது வரும் நிதியாண்டிற்கான (FY'14) மூலதன சுழற்சியை விரிவுபடுத்துவதற்காகவே பெரும்பாலும் உபயோகிக்கப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

துறைவாரியாக, அதிக மூலதனம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட துறைகளான, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம் மற்றும் சுரங்கம் போன்றவற்றில் உடனடியான முன்னேற்றம் சாத்தியம் இல்லை என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், மருந்துகள், தகவல் தொழில் நுட்ப சேவைகள் (அந்நிய கையகப்படுத்தலில் ஆர்வம் உள்ள நிறுவனங்கள் நீங்கலாக), சிமெண்ட் (பெரிய ஒருங்கிணைந்த வீரர்கள்) மற்றும் FMCG போன்ற நிறுவங்களின் கிரெடிட் அளவில் பெரும் சரிவை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களுடைய நிலையான மூலதனம், மற்றும் குறைந்த அளவிலான அந்நிய மூலதனம் போன்றவை அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit metrics of BSE 500 cos weakest since 2008: India Ratings

The credit metrics of BSE 500 corporates, an index of 500 top public listed firms, have deteriorated to their lowest level since fiscal year 2008, says a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X