இலவச சேவைகளை வழங்கும் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமான நிறுவனங்கள் ‘அன்பண்டலிங்' முறையை பின்பற்றி அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக கட்டணம் விதித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், எல்லாவற்றிற்கும் விலை விதிக்காமல் ஏற்றுக்கொள்ளத் தக்கவைகளுக்கு மட்டும் விதிப்பது நல்ல பயனளிப்பதை சிலர் உணர்ந்து கொண்டுள்ளனர்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

தேசிய ஊர்தியான ஏர் இந்தியா நிறுவனம், அனைத்து உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களும் இருக்கைகளை முன்னரே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகிறது, ஆனால் இதை ஏர் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

குறைந்த விலை ஊர்தியான (எல்சிசி) ஸ்பைஸ் ஜெட், உள்நாட்டு விமானங்களில் சுமார் 20 கிலோ அளவுக்கு இலவச பயணப்பொதியை அனுமதித்து வருகிறது. இதுவே ஏனைய விமான சேவை நிறுவனங்கள் 15 கிலோ அளவிலான பயணப் பொதியை மட்டுமே உள்நாட்டு பயணிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

ரூபாய் 5,000 மட்டுமே மிச்சம்

ரூபாய் 5,000 மட்டுமே மிச்சம்

ஒரு மூத்த ஏர் இந்தியா அதிகாரி கூறுகையில், "வான்வழி சேவைகளின் ரெகுலேட்டர் விமான நிறுவனங்கள் சுமார் 25% அளவிலான இருக்கைகளை மட்டுமே முன்பதிவுக்கு வழங்க முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே, இதன் மூலம் நம்மால் அதிகபட்சமாக ரூபாய் 5,000 மட்டுமே மிச்சம் பிடிக்க முடியும். இதற்கு மாறாக, முன்பதிவுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு பதில், இதே விலையில் மற்றொரு டிக்கெட்டை விற்றாலாவது அதில் ஒரு அர்த்தம் இருக்கும். உள்நாட்டு விமானங்களில் இருக்கை தேர்ந்தெடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க நம்மால் இயலாது. இத்தகைய கட்டணத்தை சர்வதேச விமானங்களில் வேண்டுமானால் நாம் விதித்துக் கொள்ளலாம்." என்று கூறியுள்ளார்.

அன்பண்டலிங்

அன்பண்டலிங்

அரசாங்கம் விமான சேவைகளுக்கு ‘அன்பண்டலிங்' முறையை உபயோகித்துக் கொள்ள அனுமதித்தபோது, ஏர் இந்தியா நிறுவனம் தான் முதலில் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 20 கிலோ இலவச பயணப் பொதியை 15 கிலோவாக மாற்றியது.

 ஏர் ஏஷியா மற்றும் டாடா நிறுவனத்தின் கூட்டு

ஏர் ஏஷியா மற்றும் டாடா நிறுவனத்தின் கூட்டு

மலேஷியாவைச் சேர்ந்த குறைந்த விலை ஊர்தியான ஏர் ஏஷியா மற்றும் டாடா நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இயக்கப்படவிருந்த விமான சேவைகளில் இலவச பயணப்பொதி வசதி அளிக்கிறது, அதனை முன்னுதாரணமாகக் கொண்டு தாங்களும் அவ்வாறே இந்த இலவச வசதியை அளிக்கலாம் என்றும் நம்பிக்கொண்டிருந்தன. ஆனால், ஏர் ஏஷியா நிறுவனம் 15 கிலோ பயணப்பொதியை மட்டுமே அனுமதிக்கப்போவதாகக் கூறியவுடன் ஏர் இந்தியாவின் நம்பிக்கை சுத்தமாக தகர்ந்து விட்டது.

20 கிலோ பயணப்பொதி

20 கிலோ பயணப்பொதி

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தான் 20 கிலோ பயணப்பொதியை அனுமதிப்பதற்கான காரணமாகக் கூறுவது "சராசரியாக பெரும்பாலான உள்நாட்டுப் பயணிகள் 15 கிலோவுக்கு உட்பட்ட பயணப்பொதியையே சுமந்து வருகின்றனர், அதனால் பயணப்பொதி தொடர்பான சட்டதிட்டங்களில் கெடுபிடி காட்டுவது அவசியமில்லாதது என்பதேயாகும்".

அரசாங்த்தின் தலையிட்டு

அரசாங்த்தின் தலையிட்டு

அரசாங்கம் விமான சேவைகளுக்கு "அன்பண்ட்லிங்" வசதியை அனுமதித்தவுடன், பெரும்பாலான விமான நிறுவனங்கள் அலறியடித்துக் கொண்டு அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப் புறப்பட்டதனால் எழுந்தவையே இந்த முடிவுகள். ஒரு நிறுவனம் நடு இருக்கையை பதிவு செய்வதற்குக் கூட கட்டணம் விதிக்க முற்பட்டது. இதனால் அரசாங்கம் உள்ளே தலையிட்டு, உள்நாட்டு விமான நிறுவனங்களில் முன்பதிவு செய்து கொள்ளக்கூடிய இருக்கைகளின் எண்ணிக்கையை அவ்விமானத்தின் கொள்ளளவில் 25% ஆக வரையறுக்க வேண்டியதாகி விட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India, SpiceJet offer some services for free

At a time when airlines are 'unbundling' services and charging for them, some are discovering that it pays not to put a price tag on everything.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X