வங்கி உரிமத்திற்கான விதிமுறைகளில் எந்தத் தளர்வும் இல்லை!!!: ஆர்.பி.ஐயின் துணை கவர்னர்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி உரிமத்திற்கான விதிமுறைகளில் எந்தத்  தளர்வும் இல்லை!!!: ஆர்.பி.ஐயின் துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் கோரும் விண்ணப்பங்களை மீளாய்வு செய்யத் துவங்கியுள்ளது. அனைத்து விண்ணப்பங்களையும் ஆய்வு செய்ய சிறிது காலமாகும் என துணை கவர்னர் ஆனந்த் சின்ஹா கூறியுள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சின்ஹா ​​"நாங்கள் விண்ணப்பங்களை மீளாய்வு செய்யத் துவங்கியுள்ளோம். பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

 

இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளக மீளாய்வு முடிந்தவுடன், வெளி மீளாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சின்ஹா ​​கூறினார்.

 

"வங்கி உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களும் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்" என்று சின்ஹா ​​கூறினார்.

500 கோடி நிகர மதிப்பு, உரிமம் கோரும் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமை, நிதிசார் துறைகளில் செயல்படாமை உட்பட எந்த விதிமுறைகளிளும் எந்தத் தளர்வும் விண்ணப்பதாரர்களுக்கு இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New bank licences will take some time: RBI

Reserve Bank of India (RBI) has started scrutiny of applications and Deputy Governor Anand Sinha has said that the whole exercise will take some time to complete
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X