நிலத்தை திருப்பி தரமாட்டோம்: இன்ஃபோசிஸ் அதிரடி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலத்தை திருப்பி தரமாட்டோம்: இன்ஃபோசிஸ் அதிரடி!!
கொல்கத்தா: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், மேற்கு வங்கத்தில் முதன் முறையாக துவங்கப்படவிருந்த வாளகத்திற்கு தரப்பட்ட நிலத்தை திருப்பி தராது. அதேவேளையில் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) போன்ற நன்மைகள் கிடைக்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளுக்கு தயாராக உள்ளோம் என அறிவித்துள்ளது.

(Gold rates in India on August 7)

"சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) எங்களுக்கு முக்கியம் இல்லை. அதேவேளையில் பொருளாதார மண்டலம் போன்ற நன்மைகள் கிடைக்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளுக்கு தயாராக உள்ளோம் ," இன்போசிஸ் நிர்வாக துணைத் தலைவர் எஸ் (கிரிஸ்) கோபாலகிருஷ்ணன் திங்களன்று கூறினார்.

 

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி சலுகைகளும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத வரி சலுகைகளும் மற்றும் மீதமுள்ள காலத்தில் 50 சதவீத வரி சலுகைகளும் வழங்கப்படும் என அவர் நிருபர்களிடம் கூறினார்.

 

மாநில அரசு இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ராஜர்ஹட் அருகே 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. எனினும் அரசு அப்பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க முன்வராததால், எந்த பணிகளும் தொடங்கவே இல்லை.

"இன்போசிஸ் நிறுவனம் நிலத்தை திருப்பி தராது. இந்த சலுகைகள் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் ஊடாக சில இடங்களில் தரப்படுகின்றன. எந்த அரசும் முதலீடுகளை ஈர்க்க விரும்பும். வேறு சில வாய்ப்புகள் இருக்கும். அவற்றை மாநில அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும்" என கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இன்ஃபோசிஸ் தவிர, மேலும் ராஜர்ஹட் பகுதியில் விப்ரோ நிறுவனம் தொடங்கவிருந்த அதன் இரண்டாவது வாளகமும் இது போன்ற பிரச்சினையில் சிக்கி உள்ளது. "இது ஒரு சவாலான போட்டி நிறைந்த சூழல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய நிலப் பிரச்சினை பற்றி குறிப்பிடுகையில், பெரிய திட்டங்களுக்கு அதிகமான நிலம் வேண்டும். இது தொடர்பாக, மாநில அரசாங்கங்கள் தான் முடிவு எடுக்கவேண்டும்" என்று அவர் கூறினார்.

"மேற்கு வங்க அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என நம்புகிறேன் என்று கூறிய அவர், "பெரிய திட்டங்களுக்கு அதிகமான நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்", என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No plan to surrender Bengal land, open to substitute model: Infosys

IT major Infosys is open to considering an alternative model with associated SEZ-like benefits for its maiden campus in West Benga
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X