விஜய் மல்லையாவுக்கு கொடுத்த காசு ஊ ஊ!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் மல்லையாவுக்கு கொடுத்த காசு ஊ ஊ!!
மும்பை: வட்டியும் முதலும் சேர்த்து ரூ 6,072 கோடி கடன்களை திருப்பி வாங்க வழியில்லாத கடன்காரர்கள் மும்பை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் அருகே அமைந்துள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தம் வசப்படுத்தியுள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ் பி ஐ கேப் டிரஸ்டி கம்பெனி லிமிடெட், கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கு கடன் கொடுத்த நிறுவனங்களுள் ஒன்று. அந்த நிறுவனம், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 25,850 சதுர அடி நிலத்தை கையபடுத்தியுள்ளது. இதில் 17,072 சதுர அடிக்கும் மேற்பட்ட பரந்து விரிந்த அலுவலக வளாகமும் அடங்கும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

 

ஒரு மூத்த பொதுத்துறை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, " கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் விற்பனை செய்யப்படும் போது, மீண்டும் எங்கள் பணத்தின் ஒரு பகுதியை திரும்ப பெற முடியும் என்ற உறுதி உள்ளது." எனினும், பெரும்பாலான கடன்கார்கள் 2012 ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இருந்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன சொத்துக்களை செல்லாக்காசாக கணக்கிட்டு வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கு கடன்கொடுத்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சுமையை சுமந்ததில் கூன் விழுந்து போயினர். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து விஜய் மல்லையாவின் விமானம் ஆகாயத்தில் பறக்க முடியாமல் தரையில் படுத்தே கிடக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lenders takes over KFA's Mumbai headquarter: Media Report

In a move to recover Rs 6,072 crore debts along with interest, lenders to Kingfisher Airlines have taken over the corporate office of KFA.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X