அமெரிக்கவின் நடவடிக்கையினால் பாதிப்பிற்குள்ளாகும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யு.எஸ். ஹெல்த் ரெகுலேட்டரான எஃப்டிஏ, வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து பொது மருந்து தயாரிப்பாளர்களுக்கான கட்டணங்களை உயர்த்தவிருப்பதால், பெரும்பாலான இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் கூடிய விரைவில் தங்கள் பொருட்களை அமெரிக்க சந்தைகளில் விற்பதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (FDA) தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் கைதேர்ந்தவை

இந்திய நிறுவனங்கள் கைதேர்ந்தவை

பெரும்பாலும் பொது வர்க்கத்தைச் சேர்ந்த புதுமையான மருந்து வகைகளை, தங்களின் காப்புரிமை முடிவடைந்த பின்னர், குறைவான விலை விகிதத்தில் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்களாக விளங்கும் இந்திய நிறுவனங்கள், அமெரிக்க பொது மருந்து சந்தையில் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான 10 சதவீத பங்குகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பொது மருந்துகளின் பயன்பாடுகளை மறுசீராய்வதற்கும், வசதி வாய்ப்புகளை பரிசோதிப்பதற்கும் ஆகக்கூடிய செலவுகளை சமாளிப்பதற்கு உதவும் வகையில், நிறுவனங்கள் பயனீட்டாளர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஒழுங்குமுறை விதிகள் கோருகின்றன.

 

 

எஃப்டிஏ விதிமுறைகளின் விளைவு

எஃப்டிஏ விதிமுறைகளின் விளைவு

எனினும், எஃப்டிஏவினால் முன்வைக்கப்பட்டுள்ள பொது மருந்து தயாரிப்பாளர்களுக்கான கட்டண உயர்வு, இந்தியா மற்றும் இதர நாட்டின் நிறுவனங்கள் மட்டுமல்லாது அமெரிக்க உள்நாட்டு நிறுவனங்களையும் சேர்த்து, அனைத்து நிறுவனங்களுக்குமான ஒட்டுமொத்த விலைகளை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்கள் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களுக்கு அனுசரித்துப் போவதை நன்கு உணர்ந்துள்ளதாகவும், தம்மால் "இயன்ற அளவு" கட்டண உயர்வை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் எஃப்டிஏ கூறியுள்ளது.

 

 

அக்டோபர் 1, 2013 முதல் நடைமுறைக்கு வரும்

அக்டோபர் 1, 2013 முதல் நடைமுறைக்கு வரும்

அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான நாளிதழான ஃபெடரல் ரெஜிஸ்டரில் இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1, 2013 -இல் இருந்து நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்குப் பின் இந்த கட்டணம் மறு ஆய்வு செய்யப்படும்.

24 சதவீதம் கூடுதல் கட்டணம்

24 சதவீதம் கூடுதல் கட்டணம்

புதிய அப்ரிவியேட்டட் நியூ டிரக் அப்ளிக்கேஷன் (ஏஎன்டிஏ) கட்டணம் சுமார் 63,860 யுஎஸ்டி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய கட்டணமான 51,520 யுஎஸ்டியைக் காட்டிலும் சுமார் 24 சதவீதம் அதிகமாகும்.

மருந்து பொருள்களுக்கான இறுதி ஒப்புதல்

மருந்து பொருள்களுக்கான இறுதி ஒப்புதல்

மேலும் ஏஎன்டிஏ உள்ளடக்கியுள்ள தகவலானது, எஃப்டிஏ சென்டர் ஃபார் டிரக் எவால்யுவேஷன் அண்ட் ரிசர்ச் மற்றும் ஆஃபீஸ் ஆஃப் ஜெனரிக் டிரக்ஸ் இல் சமர்ப்பிக்கப்பட்டால், அம்மருந்து பொருள்களுக்கு மறுஆய்வு மற்றும் பொது வர்க்க மருந்து பொருள் என்று இறுதி ஒப்புதல் அளிக்க வழி வகுக்கும் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல், 2014 நிதியாண்டுக்கான (அக்டோபர் 1, 2013 முதல் செப்டம்பர் 30, 2014 வரை) பிரையர் அப்ரூவல் சப்ளிமென்ட் (பிஏஎஸ்) கட்டணம் சுமார் 24 சதவீத அளவில் சுமார் 31,930 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. பிஏஎஸ் பயன்பாடு, அங்கீகரிக்கப்பட்ட பொருட்களில் செய்யப்படக்கூடிய மாற்றங்களை உள்ளடக்கக்கூடியதாகும்.

 

 

48 சதவீத TMF

48 சதவீத TMF

சுமார் 48 சதவீத அளவில் 31,460 அமெரிக்க டாலராக டிரக் மாஸ்டர் ஃபைல் (டிஎம்எஃப்) கட்டணத்தில் செய்யப்பட்டுள்ள விலையேற்றமே மிக அதிகமான ஏற்றமாகும்.

எஃப்டிஎஃப் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

எஃப்டிஎஃப் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

மனித மருந்துப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் உபயோகிக்கப்படும் வசதி வாய்ப்புகள், செய்முறைகள், அல்லது பொருட்கள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய ஒரு டிஎம்எஃப் -ஐ, யூஎஸ்எஃப்டிஏவிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

ஃபினிஷ்ட் டோஸேஜ் ஃபார்ம்களுக்கான (எஃப்டிஎஃப்) வருடந்தர வசதி கட்டணம் சுமார் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு எஃப்டிஎஃப் வசதி கட்டணம் சுமார் 220,152 யுஎஸ்டியாகவும், அயல்நாட்டு எஃப்டிஎஃப் வசதி கட்டணம் சுமார் 235,152 யுஎஸ்டியாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

 

 

ஏபிஐ கட்டணம் குறைத்துள்ளது

ஏபிஐ கட்டணம் குறைத்துள்ளது

எனினும், எஃப்டிஐ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆக்டிவ் ஃபார்மாசூட்டிக்கல் இன்கிரீடியன்ட் (ஏபிஐ) வசதிகளுக்கான வருடாந்தர ஏபிஐ கட்டணத்தைக் குறைத்துள்ளது.

இக்கட்டணங்கள் நிலுவையில் உள்ள அப்ளிக்கேஷன்களின் பணிச்சுமையைக் குறைப்பதிலும், பொது மருந்து பயன்பாடுகளின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய சராசரியாக தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதிலும், அபாய அடிப்படையிலான பரிசோதனையை மேம்படுத்துவதிலும் மிகவும் உபயோகமாக இருப்பதாக எஃப்டிஐ தெரிவித்துள்ளது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US to hike fees for generic drugmakers; Indian firms to be hit

Many Indian drugmakers will soon have to bear higher costs for sale of products in American markets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X