இந்தியாவிற்கு 100 மில்லியன் டாலர் கடன்!!: உலக வங்கி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிற்கு 100 மில்லியன் டாலர் கடன்!!: உலக வங்கி
உலக வங்கி நகர்ப்புற பகுதிகளில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வீடுகள் வாங்க, கட்ட அல்லது மேம்படுத்த உதவும் வகையில் இந்தியாவிற்கு 100 மில்லியன் டாலர் கடன் வழங்க உள்ளது என ஊடக அறிக்கை கூறுகிறது.

உலக வங்கிக்கும், இந்திய நிதி அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தத்தில் அமையவுள்ள திட்டத்தை தேசிய வீடமைப்பு வங்கி நடைமுறைப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் மக்கள் வாழ இந்திய நகர்ப்புற பகுதிகளில் வீடுகள் தேவைபடுகின்றன " என இத்திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலக வங்கி நடவடிக்கைகளின் ஆலோசகர் மைக்கேல் ஹனே கூறினார்.

நிதி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இத்திட்டம் கடன் வழங்குனர்களுக்கு வட்டிதொகையில் 200-300 புள்ளிகளைக் (bps) குறைப்பதின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வீடுகள் கட்ட கடன் வழங்க ஊக்கம் அளிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

உலக வங்கி அறிக்கையின் படி, இந்தியாவில் வீடுகள் பற்றாக்குறையில் 90 சதவீதம் குறைந்த வருமான கொண்ட குடும்பங்களின் மூலம் ஏற்படுகிறது என்றும், கடந்த ஆண்டு நகர்ப்புற பகுதிகளில் வீடுகள் பற்றாக்குறை 19 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

(மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - ஒர் பார்வை!!)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank to give $100 mn India for low-cost housing

World Bank is to provide a soft loan of $ 100 million to India to enable low-income households in urban areas to purchase, build or upgrade their houses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X