52-வார தாழ்வு நிலையை அடைந்த 6 ப்ளூ சிப் பங்குகள்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாயின் மதிப்பு மூழ்கிக் கொண்டே இருக்கும் அதே வேளையில் பிணைய ஈட்டங்கள் உயர்ந்து கொண்டேயிருந்தாலும், இன்றைய சந்தை நிலவரம் படுகொலைக்களமாகவே பாவிக்கப்படுகிறது. சுமார் 52-வார தாழ்வான விலையை அடைந்துள்ள 6 ப்ளூ சிப் பங்குகள் பின் வருமாறு விவாதிக்கப்பட்டுள்ளன.

லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ

லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ

பெரும்பான்மையான இதர நிஃப்டி பங்குகளைப் போன்றே, எல்&டியும் விற்பனை நிர்பந்தத்துக்கு ஆளாகி, தேசிய பங்குச் சந்தையில் சுமார் 52-வார தாழ்வு நிலையான 708 ரூபாயை எட்டியுள்ளது. இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான இது, மேலும் சரிவுகளை சந்திக்கும் பட்சத்தில், போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு தேர்வாகும். முதலீட்டு நிலவரம் சீராகி, பொருளாதாரம் மீட்சியடையின் போது, பங்கு விலையும் புத்துயிர் பெறும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியும், அதன் ஏனைய வங்கி சகாக்களைப் போல், தேசிய பங்குச் சந்தையில் சுமார் 52-வார குறைந்த நிலையான 788 ரூபாயை எட்டியுள்ளது. உயர்ந்து கொண்டேயிருக்கும் பிணைய ஈட்டங்கள் லாப வாய்ப்பை பாதிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் இதன் பங்கு விலைகள் சரிவடைந்துள்ளன. இப்பங்குகள் தற்போதைய சூழலில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதால், இவற்றை வாங்குவது நன்மையளிக்கும் என்று ஆய்வாலர்கள் நம்புகின்றனர்.

யெஸ் வங்கி
 

யெஸ் வங்கி

பொருளாதார மந்தநிலை மற்றும் உயர்ந்து கொண்டிருக்கும் பிணைய ஈட்டங்களால் அதிகரிக்கக்கூடிய இழப்புகள் போன்றவை முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதால், யெஸ் வங்கியும் 52-வார தாழ்வு நிலையான 224 ரூபாய்க்குத் தள்ளப்பட்டுள்ளது. வருவாயை 6 மடங்கு பெருக்கினால் வரக்கூடிய இதன் முன்னோக்கிய விலை, யெஸ் வங்கியின் பங்குகள் நீண்ட கால முதலீடு நோக்கில் லாபங்களைப் இட்ட மிகக் கவர்ச்சிகரமான பங்காக விளங்குகிறது.

பெல் (BHEL)

பெல் (BHEL)

மிகப்பெரும் மின் சாதன உற்பத்தியாளரான பெல் நிறுவனத்தின் பங்குகள், மின் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்நிறுவனத்தின் ஆர்டர்கள் குறைந்து விட்ட தற்போதைய நிலையில், இதன் பங்கு அக்டோபர் மாதத்தின் போது இருந்த 272 ரூபாய் அளவிலிருந்து மேலும் சரிவடைந்து காணப்படுகிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரும் லென்டரான எஸ்பிஐ, தேசிய பங்குச் சந்தையில் 52-வார தாழ்வு நிலையான 1,488 ரூபாய்க்கு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இயங்கா சொத்துகள், பொருளாதார சூறாவளிகள் மற்றும் பணம் தொடர்பான கடினமான சூழ்நிலைகள் போன்றவற்றைப் பற்றிய அச்சங்களின் முலம் இதன் பங்குகளை பொலிவிழக்கச் செய்துள்ளன.

அல்ட்ராடெக் டெக் சிமெண்ட்

அல்ட்ராடெக் டெக் சிமெண்ட்

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமான இந்நிறுவனத்தின் பங்கு இதன் உச்சபட்ச அளவான 2,154 ரூபாயிலிருந்து கீழிறங்கியுள்ளது. பொருளாதரத்தில் ஏற்படக்கூடிய மந்தநிலை, இந்நிறுவனத்தின் மார்ஜின்கள் தொடர்ந்து மேலே செல்வதற்கு தடையாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

(நீண்டகால முதலீட்டை விரும்புவோர் இந்த பங்குகளில் முதலிடு செய்யலாம்!!!)(நீண்டகால முதலீட்டை விரும்புவோர் இந்த பங்குகளில் முதலிடு செய்யலாம்!!!)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 blue chip stocks available at 52-week lows

6 blue chip stocks that have fallen to 52-week lows.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X