சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பத்திரங்களை வாங்க முடிவு: நிதி அமைச்சகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பத்திரங்களை வாங்க முடிவு: நிதி அமைச்சகம்
டெல்லி:இந்திய பொருளாதார நெருக்கடியை குறைக்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பத்திரங்களை வாங்குவதற்கு நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதை பற்றி நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை கேட்டபோது "பொருளாதார சூழலுக்கு ஏற்ப, நன்மை தீமைகளை ஆராய்ந்து, தேவைப்படும் அவசியத்தை உணர்ந்து தக்க நடவடிக்கைகள் நிதி அமைச்சகம் எடுக்கும்." என தெரிவித்தனர்.

இந்திய ரூபாய் மதிப்பு இந்த நிதி ஆண்டில் மட்டும் 12 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்துவிட்டது மற்றும் சமீபத்திய வர்த்தகங்களில் ரூபாய் மதிப்பு புதிய இறக்கங்களை எதிர்கொண்டுவருகிறது.

அதிகரித்து வரும் நடப்பு கணக்கு மற்றும் வேலைவாய்ப்பு பெருகுவதின் காரணமாக சீராகிவரும் அமெரிக்க சந்தையின் வளர்ச்சி, மிகவும் கவர்ச்சிகரமாக மாறிக்கொண்டு வருகிறது. இது தான் ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என அறியப்படுகின்றன.

மாதத்திற்கு 85 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்பத்திர கொள்முதல் செய்த அமெரிக்கவின் பெடரல் வங்கி திட்டம் திருப்திகரமான பொருளாதார மீட்சியின் விளைவாக தற்போது குறைகிறது. அதன் விளைவாக வளரும் நாடுகளின் சந்தை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி தனது திட்டத்தை எதிர்பார்த்தை விட விரைவு படுத்துமாயின், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள முதலீடு வெளியே எடுக்கப்படும். இதனால் அந்நாட்டு பொருளாதார நிலைமை கண்டிப்பாக சீர்குலையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NRI bonds among options to attract dollar inflow: FinMin

The rupee has lost over 12 per cent this fiscal and has been hitting new lows in recent trading sessions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X