3 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் நுழையும் 'ரிலையன்ஸ் வங்கி': அனில் அம்பானி அதிரடி திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் நுழையும் 'ரிலையன்ஸ் வங்கி': அனில் அம்பானி அதிரடி திட்டம்!!
மும்பை: புதிய வங்கிகளை துவங்க உரிமை கோரி ஆர்பிஐயிடம் விண்ணப்பித்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும் ஒன்று. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அம்பானி இதை பற்றி கூறுகையில் "ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வங்கி உரிமம் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் ரிலையன்ஸ் வங்கியின் முலம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் கடன்களில் நான்கின் ஒரு பகுதியை கன்டிப்பாக குறைக்க உதவும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பங்கு சந்தையில் தனி நிறுவனமாக பட்டியலிடப்படும்" என்று கூறினார்.

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, "முன்மொழியப்பட்ட வங்கி, நீண்ட கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை கொண்டதாக உள்ளதாகவும், இவ்வங்கி இலாபகரமாக செயல்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

"வங்கி உரிமம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். முதலில் கட்டமாக வங்கி உரிமம் பெறுபவர்கள் மத்தியில் நாங்களும் ஒருவராக இருப்போம்," என்று ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன தலைவர் அனில் அம்பானி கூறினார்.

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பல்வேறு துணை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவது குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அனில் அம்பானி, ரிலையன்ஸ் கேபிடல் தொடர்ந்து பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும், திட்டமிடப்பட்டுள்ள வங்கி தவிர மற்ற துணை நிறுவனங்களை பட்டியலிட தற்போது எந்த ஒரு திட்டமும் இல்லை என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Reliance Bank' to be listed after three years: Anil Ambani

Hopeful of getting a banking licence for 'Reliance Bank', industrialist Anil Ambani today said this proposed venture will help lower Reliance Capital's debt to one-fourth of current levels
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X