"முதலீட்டு ஆலோசகர்களாக" 11 நிறுவனங்களை அங்கீகரித்த செபி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை:இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), நாட்டின் மூலதனச் சந்தையில் வெளிப்படையான செயல்பாட்டை செயல்படுத்த, புதிய வழிமுறைகளின் கீழ், முதலீட்டு ஆலோசகர்களாக செயல்படுவதற்கு ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் உட்பட 11 நிறுவனங்களை செபி அங்கீகரித்துள்ளது.

இந்த ஆண்டில் முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஆலோசனை கூறும் நடவடிக்கைகளை செய்யுமுன் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செபியிடம் கட்டாயம் பதிவு செய்யவேண்டுமென செபி விதிமுறைகளை விடுத்திருந்தது.

நாட்டின் மூலதனச்சந்தைச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை இன்னும் அதிகரிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தவிர, IFMR இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர் சர்விசஸ், சென்செஜ் பைனான்சியல் சர்விசஸ் மற்றும் வால்யுபை சொலுசன்ஸ் போன்றவை நிறுவனங்களும் முதலீட்டு ஆலோசகர்களாக பதிவு செய்தது.

ஜூலை 31, 2013 இறுதியில் வெளியிடப்பட்ட செபி தரவுகளின் படி சுமார் 20 நிறுவனங்கள் முதலீட்டு ஆலோசகர்களாக செயல்பட அனுமதி கோரின.

கடந்த மே மாதம், செபி முதலீட்டு ஆலோசகர் அனுமதி கோர எவ்வாறு பதிவு செய்ய வேண்டுமென வழிமுறைகளை வெளியிட்டு இருந்தது. மோசடி நிறுவனங்களின் தவறான முதலீட்டு ஆலோசனையால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலையும் ஏமாற்றங்களையும் சமாளிக்க, ஒரு மாத காலம் ஆலோசனைக்கு பின்னர் விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

புதிய விதிமுறைகளின் படி, முதலீட்டு ஆலோசகர்கள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என செபி தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI and 10 others to act as investment advisers

The Securities and Exchange Board of India (SEBI) has authorised as many as 11 entities, including ICICI Securities, to act as investment advisers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X