"உணவு பாதுகாப்பு திட்டம்" பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது!!!: உணவு அமைச்சர் அதிரடி பதில்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு பாதுகாப்பு திட்டம் அரசாங்கத்தின் கருவூலத்தை காலி செய்து விடும் என்ற அச்சத்தை தணிக்கும் விதமாக, உணவு துறை அமைச்சர் கே.வி. தாமஸ் உணவு பாதுகாப்பு திட்டம் இந்திய பொருளாதாரத்தை அதிகளவில் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

"நாங்கள் உணவு பாதுகாப்பு திட்ட மசோதாவை மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். மேலும் உணவுப் பாதுகாப்பு மசோதா பொருளாதாரத்தை பாதிக்கும் விதமாக எந்த விதமான மற்றங்களும் செய்யபடவில்லை" என தாமஸ் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், நிதிப் பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சம் அர்த்தமற்றது என்று மத்திய அரசு கூறியது.

இத்திட்டத்திற்கு உணவு மானியமாக ரூ 90,000 கோடி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திட்ட விரிவாக்கத்திற்கு கூடுதலாக 10,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனாலே எந்த நிலையிலும் குறிப்பிட்ட தொகையை தாண்டி செலவுகள் ஏற்படாது. அடுத்த ஆண்டில் இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களில் செயல்படுத்த கூடுதலாக ரூ 10,000 கோடி மானியம் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

"பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து சீர்திருத்தங்களை கொண்டு வந்தால்,
25-30% வரை மானியத்தை குறைக்க முடியும்" என்று தாமஸ் கூறினார். மேலும் 82 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வழங்க இத்திட்டம் வழிவகை செய்யும் என மகிழ்ச்சியோடு கூறினார்.

நிங்கள் சொல்வதுபோல் நடந்தால் மிக்க மகிழ்ச்சி!! ஆனால் இது நடக்குமா???

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian economy won't be impacted adversely by the food security bill: KV Thomas

The food security programme cost will take a toll on government finances, Food Minister K V Thomas said that the economy will not be impacted adversely by the bill.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X