மிகவும் மோசமான நிலையில் உற்பத்தித் துறை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் மோசமான நிலையில் உற்பத்தித் துறை
மும்பை: கடந்த நான்கு ஆண்டு காலத்தில், முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் இந்திய உற்பத்தித் துறையின் வணிக செயற்பாடுகள் சிதைவுற்று, அவுட்புட் மற்றும் புதிய ஆடர்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என, ஆகஸ்ட் 2013க்கான ஹெச்.எஸ்.பி.சியின் பி.எம்.ஐ உற்பத்திக் குறியீடு குறிப்பிடுகிறது.

11-மாத தொடர் வளர்ச்சி கண்டு வந்த ஏற்றுமதி ஆடர்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

"ஹெச்.எஸ்.பி.சியின் இந்திய உற்பத்தி கொள்முதல் மேலாளரின் இன்டெக்ஸ் டிஎம் (PMITM), ஆகஸ்ட் மாதத்தில், 50.1இல் இருந்து 48.5ஆக வீழ்ச்சி கண்டிருப்பது, வணிக செயல்பாடுகளில் ஒரு நடுத்தரமான சிதைவு நிலையைக் குறிப்பிடுகிறது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், சமீபத்திய இன்டெக்ஸ் மிகக் குறைந்த அளவில் இருந்தது மட்டுமின்றி, மார்ச் 2009இல் இருந்து, முதல் முறையாக 50.0ற்கு குறைவாக பதிவாகியுள்ளது." என சந்தை நிலைமை பற்றிய ஹெச்.எஸ்.பி.சி உற்பத்தி பிஎம்ஐ தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் ஆசிய முதன்மை பொருளாதார நிபுணர் லேய்ஃப் எஸ்கேசென், இந்தியாவின் உற்பத்திதுறை இண்டெஃஸ் கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடுகையில், "மார்ச் 2009 இல் இருந்து பார்க்கும் போது, இந்திய உற்பத்தித் துறை செயல்பாடுகள் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் சுருக்க நிலையை அடைந்துள்ளது. புதிய ஆடர்களில், குறிப்பாக எற்றுமதி ஆடர்களில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி குறைக்கபட்டதன் காரணமாக அவுட்புட்டில் கடும் வீழ்ச்சி ஏற்றப்பட்டது." என குறிப்பிட்டார்.

நாணய பலவீனமாக இருந்தபோதிலும், இன்புட் மற்றும் அவுட்புட் விலை வீக்கம் குறைந்துள்ளது தைரீயம் ஊட்டுவதாக உள்ளது. இது டிமாண்ட் நிலைமைகளை மிருதுவாக்கி, விலையிடும் சக்தியைக் குறைத்துள்ளது. இந்த பலவீனமான வளர்ச்சி, பின்விளைவுகளை நிவர்த்தி செய்யவும், நாணயத் தேய்வினை கட்டுப்படுத்த உதவும். இன்னும் சிறிது காலத்திற்குள் ஆர்பிஐ, லிக்யூடிடி டைடெனிங்க் நடவடிக்கைகளைக் கொண்டுவரும்.

சுமார் 500 உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் நிர்வாகக் குழுக்களுக்கு அனுப்பப்பட்ட வினாப்பட்டியலில் கிடைத்த மாதாந்த பதில்களிலிருந்து தொகுக்கப்பட்ட தரவு அடிப்படையில், ஹெச்.எஸ்.பி.சி இந்திய உற்பத்தி பிஎம்ஐ இன்டெக்ஸ் பெறப்பட்டுள்ளது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொழிற்துறையின் பங்களிப்பின் அடிப்படையில், ஸ்டான்டெட் இன்டஸ்ட்ரியல் கிளாசிஃப்பிகேஷன் குழுவின் மூலம், புவியியல் ரீதியாக இத்தரவுகள் தயாரிக்கப்பட்டது.

மாத நடுப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தரவின் அடிப்படையில், நடப்பு மாதத்தை முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், கணக்கெடுப்பு பதில்களில் மாற்றம் பிரதிபலிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Aug manufacturing worst in 4 years: HSBC PMI

Business conditions in the Indian manufacturing sector deteriorated during August for the first time in over four years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X