10 பில்லியன் டாலர் வரை நிதி திரட்ட முடிவு!!: ரகுராம் ராஜன் அதிரடி நடவடிக்கை!!!.

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டு நாணய மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களின் (எஃப்.சி.என்.ஆர்) டாலர் நிதி பரிமாற்றங்களுக்கான ஒரு சிறப்பான வழிமுறையை ரிசர்வ வங்கி அனுமதித்தது. இந்த நடவடிக்கையின் முலம், 10 பில்லியன் டாலர் வரை பெற வாய்ப்பு உள்ளது என நிதியியல் வல்லுநர்கள் கூறுகினறனர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அந்திய முதலிடுகளை அதிகரிக்க வங்கிகளுக்கு, 3 வருட காலத்திற்கு, வருடத்திற்கு 3.5 சதவிகித அடிப்படையில் புதிய எஃப்.சி.என்.ஆர்-பி டாலர் நிதி திட்டத்தை ஆர்.பி.ஐ வழங்கும்" என தெரிவித்தார்.

மெர்ரில் லிஞ்ச் வங்கி

மெர்ரில் லிஞ்ச் வங்கி

அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் (Merrill Lynch) வங்கியின் (BofA-ML) படி "இப்புதிய நிதி நடவடிக்கையால் (எஃப்சிஎன்ஆர்-பி) 8-10 பில்லியன் டாலர் வரை பெற முடியும்" எனவும், தீவிர கிளர்ச்சி எதிரொலிகள் எற்படும் நேரத்தில், என்.ஆர்.ஐகளை ரூபாய் அபாயங்களிலிருந்து விடுவிப்பதற்கு இது உதவும்" எனவும் கூறப்பட்டுள்ளது.

மார்கன் ஸ்டான்லி

மார்கன் ஸ்டான்லி

மேலும் "ஆர்.பி.ஐ அறிவித்துள்ள நடவடிக்கைகள் இயல்பானதாக இருக்கிறது எனவும், இது முதலீட்டு உள்ளீடுகளை அதிகரித்து, அண்மை காலங்களில் நிதி நெருக்கடியை குறைக்க உதவும்" எனவும் மார்கன் ஸ்டான்லி கூறினார்.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

ஆகஸ்ட் 28ம் தேதி, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புக் குறைந்து 68.85 ஐத் தொட்டது, நாணய அளவுகோலை நேர்படுத்துவதற்கு ஆர்.பி.ஐ மேற்கொண்ட புதிய நடவடிக்கைகளின் பின்னர், 138 காசுகள் வலிமை பெற்று, இன்டர்பாங்க் அந்நிய செலாவணி சந்தையில் தற்போது டாலருக்கு எதிராக 64.41 ஆக பலமடைந்துள்ளது.

எஃப்.சி.என்.ஆர்-பி வைப்பு நிதி திட்டம்

எஃப்.சி.என்.ஆர்-பி வைப்பு நிதி திட்டம்

எஃப்.சி.என்.ஆர்-பி வைப்பு நிதி திட்டத்தின் முலம், ரூபாய் மதிப்பு வலிமை அடைவது மட்டும் அல்லாமல், பரிமாற்றச் சந்தையில் ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று BofA-ML அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, 1998 மறுஎழுச்சி இந்தியா கடன்பத்திரங்கள் மற்றும் 2001 இந்தியா மில்லினியம் வைப்புக்கள் ஆகியவை இதே போன்ற திட்டங்கள் ஆகும். ஒவ்வொரு திட்டமும் 5 பில்லியன் டாலர் வரை திரட்ட பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

இணை சக்தியாக ஆர்.பி.ஐ

இணை சக்தியாக ஆர்.பி.ஐ

ஒரு பிரத்தியேக திட்டத்தின் மூலம் என்.ஆர்.ஐ டாலர் வைப்புகளை உயர்த்துவதற்கான தேவையை, குறிப்பிடத்தக்க நாணய அழுத்தங்கள் கொண்டுவருகிறது, இதன் கீழ் ஒரு பகுதி அந்நிய செலாவணி இடர்களை அரசு தாங்க வேண்டியுள்ளது எனவும் மார்கன் ஸ்டான்லி குறிப்பிட்டது.

ஆர்.பி.ஐயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

ஆர்.பி.ஐயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

ஆர்.பி.ஐ, ஜூலை 15 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் கொண்டுவருவது இரண்டு நிகழ்வுகளிடமே உள்ளது. ஒன்று, ஃபெடரல் டேப்பரிங் (QE3) தள்ளி வைத்தல் இரண்டு, சந்தையில் விலை நிலை குறைவது. எது நடந்தாலும் சரி ஆர்.பி.ஐ, செப்டம்பர் 20இல் தனது முதல் கொள்கையில், ஜூலை 15 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் கொண்டுவரும் என BofA ML குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 15 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

ஜூலை 15 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

"வர்த்தக சந்தையின் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரியவந்த பின்னரே, ஜூலை 15 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆர்.பி.ஐ, அக்டோபர் கடைசியில் அல்லது டிசம்பரில் முதல் வாரத்தில் நீக்கும்" என எதிர்பார்க்கபடுவதாக் இந்த அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks could mobilise up to $10 billion from abroad: Experts

The Reserve Bank's move to allow a special window to swap foreign currency non-resident (FCNR) dollar funds for boosting foreign fund inflows is likely to fetch around $10 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X