அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலை என்ன???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம் தரும் அச்சுறுத்தல் மற்றும் க்யூஇ3 குறைக்கப்படக்கூடிய அபாயம் உலக பொருளதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. சிரியா மற்றும் அமெரிக்கவின் நட்பு நாடுகளுக்கும் இடையேயான போரின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை கணிக்க முடியாத நிலைக்கு உள்ளது.

ஈக்விட்டி போன்று தங்கமும் ஓயாது மாறிக் கொண்டேயிருக்கும் இயல்புடன் காணப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் தங்க விலைகளை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செலுத்தக்கூடிய 4 நிகழ்வுகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

சிரியப் போராட்டம்

சிரியப் போராட்டம்

அமெரிக்கா சிரியாவின் மீது இராணுவத் தாக்குதல் நடத்த முடிவெடுக்கும் பட்சத்தில், அது தங்கத்தின் விலைகளை அதிகரிக்கச் செய்து, தற்போதைய அபாயகரமான சூழலுக்கு எதிரான ஒரு சிறந்த நிவாரணியாக விளங்கக்கூடும்.

இப்போராட்டம் தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலைகள் உச்சத்திலேயே இருக்கும்.

 

 

ரூபாய் மதிப்பின் ஏற்றம்

ரூபாய் மதிப்பின் ஏற்றம்

கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறிப்பிடத்தக்க வலுவான அடித்தளத்துடன் காணப்படுகிறது. இத்தகைய சூழல் இந்தியாவில் தங்கத்தை மலிவாகக் கிடைக்கச் செய்து உள்நாட்டு தங்க விலைகளையும் குறையச் செய்யக்கூடியதாகும்.

யு.எஸ் நான் ஃபார்ம் பேரோல்ஸ் டேட்டா

யு.எஸ் நான் ஃபார்ம் பேரோல்ஸ் டேட்டா

யு.எஸ் நான் ஃபார்ம் பேரோல்ஸ் டேட்டா சுமார் 1,80,000 வரையிலான எண்ணிக்கையில் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தைகளுக்கு, சுமார் 16,90,000 என்ற எண்ணிக்கையில் வந்துள்ள டேட்டா மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இது ஃபெட் தனது சொத்து கொள்வனவுத் திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளப் போகிறது என்ற பயத்தைப் போக்கி, தங்க விலைகளை மேலும் உயரச் செய்யும்.

 

 

தொழில்நுட்ப மறு எழுச்சி

தொழில்நுட்ப மறு எழுச்சி

தங்கம் எழுச்சியடைவதற்கான நேரம் வந்து விட்டது எனவும், அடுத்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1,420 டாலர் என்ற வீதத்தில் அது மீட்சி அடையும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கணிப்பு ஈடேறும் பட்சத்தில், அது இந்திய தங்க விலைகளையும் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 cues that will move gold rates in the next few weeks

Gold, like equities has turned volatile with an impending Syrian conflict and QE3 easing fears . Here are 4 cues that would move gold prices either way in the next few weeks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X