வங்கி கிரெடிட் அபாயங்களை களைய, மத்திய கருவூலம் அமைக்க திட்டம்!!!: ரகுராம் ராஜன் அதிரடி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கிரெடிட் அபாயங்களை களைவதில் வங்கிகளுக்கு உதவும் வண்ணம் ஆர்பிஐ, சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் கடன் தொகைக்கு பெற விழையும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கென மத்திய கருவூலம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. வங்கிகள் தங்களின் பலத்தை கூட்டுவதற்கும், பொதுவான எக்ஸ்போஷர்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும் உதவும் வண்ணம் பெரிய அளவிலான கிரெடிட்களுக்கென ஒரு கருவூலத்தை உருவாக்கி வங்கிகளோடு இனைந்து செயல்படுவது கட்டாயத் தேவையாகும் என்று ஆர்பிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"முன்கூறியதற்கிணங்க, சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலான எக்ஸ்போஷரைக் (நிதி மற்றும் நிதியல்லாத அடிப்படையிலானவை) கொண்டிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய சிஸ்டம்-வைட் எக்ஸ்போஷரை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டக்கூடியதான ரிட்டர்ன் ஆன் லார்ஜ் பார்ரோயர்ஸ் (ஃபார்ம் ஏ) மூலம் வங்கிகள் அளிக்கும் தகவல்களை உபயோகித்து வங்கிகளில் செய்யப்படும் பெரிய அளவிலான கிரெடிட்களுக்கு மத்திய கருவூலம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது." என்று அது தெரிவித்துள்ளது.

ஆர்பிஐயின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டபோது, திரு ரகுராம் ராஜன் அவர்கள் மத்திய வங்கி கிரெடிட் தகவல்களைத் திரட்டி, வங்கிகளில் இருக்கக்கூடிய பெரிய அளவிலான பொதுவான எக்ஸ்போஷர்களை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். "இது பெரிய அளவிலான கிரெடிட்களுக்கான மத்திய கருவூலம் ஒன்றை அமைக்க உதவும்; அத்தகைய செயல்பாடுகளில் வங்கிகளுடன் சேர்ந்து நாங்களும் பங்கெடுத்துக் கொள்வோம். இது பலம் கூட்டும் உத்திகள் மற்றும் பொதுவான எக்ஸ்போஷர்களைப் பற்றிய விழிப்புணர்வை வங்கிகளுக்கு அளிப்பதாய் இருக்கும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்கி கிரெடிட் அபாயங்களை களைய, மத்திய கருவூலம் அமைக்க திட்டம்!!!: ரகுராம் ராஜன் அதிரடி..

ஆர்பிஐ வங்கிகளிலிருந்து தகவல்களை திரட்டும். தகவல் எதுவும் சமர்ப்பிக்கப்படாமலோ அல்லது தப்பான தகவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ அதற்குரிய அபராதம் விதிக்கப்படும். "பெரிய அளவிலான கடன் தொகை பற்றிய தகவல்களை ஆர்பிஐயிடம் சமர்ப்பிக்கும் போது அத்தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒழுங்கை உறுதிபடுத்திக் கொள்வதில் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு உறுதிபடுத்திக் கொள்ள தவறினால், அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்றும் இத்தலைமை வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 2013 -இல் சுமார் 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தனியார்த் துறை வங்கிகளின் மொத்த அசையா சொத்துக்கள் (என்பிஏ) ஜூன் காலாண்டின் இறுதியில் சுமார் 1.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த என்பிஏ தொகையுடனான வர்த்தக வங்கிகளுக்கான மொத்த அட்வான்ஸ் -இன் விகிதம், மார்ச் 2011 -இல் 2.36 சதவீதமாக இருந்து, ஜூன் 2013 -இல் சுமார் 3.92 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI to create central repository on large credits

Reserve Bank has decided to create a central repository on large borrowers both individuals and entities with exposure of more than Rs 10 crore to help banks deal with credit risks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X