செப்டம்பர் மாத இறுதியில் தங்க இறக்குமதி அதிகரிக்கும்: ஸ்டாண்டர்டு சார்ட்டட்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மத்திய அரசு, நாட்டின் தங்க இறக்குமதியை குறைக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், விழாக்கால மவுசு மற்றும் சிறப்பான பருவநிலையின் காரணமாக தங்க இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு எழுச்சியடையும் என ஸ்டாண்டர்டு சார்ட்டட் தகவலறிக்கை கூறுகிறது.

"இந்தியாவில் தங்கத்திற்கான மவுசு பிண்வரும் காலத்தில் மீட்சியடையும். மேலும் தங்கச் சந்தையில் நீண்ட நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நாடாகத் இந்தியா திகழ்கிறது. கடந்த ஆண்டில் சுமார் 28 சதவீதம் வரையிலான உலகளாவிய ஃபேப்ரிகேஷன் டிமாண்டைக் கொண்டிருந்திருக்கிறது. முன்னோக்கிப் பார்க்கையில், விழாக்காலம் என்ற காரணம் மட்டுமின்றி, இறக்குமதியாளர்களும் இப்புதிய கொள்கையோடு அனுசரித்துப் போக பழகிக் கொண்டிருப்பதனால், இந்திய இறக்குமதிகள் குறிப்பிடத்தக்க அளவு எழுச்சியடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்." என்று அத்தகவலறிக்கை தெரிவிக்கிறது.

செப்டம்பர் மாத இறுதியில் தங்க இறக்குமதி அதிகரிக்கும்: ஸ்டாண்டர்டு சார்ட்டட்

இந்தியாவில், முக்கிய பண்டிகைள் மற்றும் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் கல்யாண காலம் ஆகியவற்றை ஒட்டி, தங்கத்திற்கான கிராக்கி உயரும். இதில் தங்கத்தின் விலையும் முக்கியப் பங்கு வகிக்கும்; சிறிய விலை வீழ்ச்சிகளின் போது கூட நுகர்வோர் இப்பொருளை மீள்சேகரம் செய்ய தலைப்படுவர்.

செப்டம்பர் மாதத்தின் போது புல்லியன் இறக்குமதிகளில் சுமார் 35 டன் வரையிலான உயர்வை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக உள்ளூர் வியாபாரிகள் மற்றும் இதர ஆதாரங்களால் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்ற ஆண்டு இதே மாதத்தில் சராசரி இறக்குமதி அளவான 59 டன்னைக் காட்டிலும் இது குறைவு.

அக்டோபர் மாதத்திலும் ஓரளவிற்கு வலுவான இறக்குமதிகள் இருக்கும். மேலும் இந்த அறிக்கையில், "யுஎஸ்டி-ரூபாய் விகிதம் ஹெச்2-நிதியாண்டு14 இல், குறைவான கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறை, உலகளாவிய அபாயங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய சிறப்பான திண்மை மற்றும் மேம்பட்ட மூலதன உட்புறப் பாய்வுகள் போன்றவற்றினால் உறுதியான நிலையை அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். யுஎஸ்டி-ரூபாய் மதிப்பு டிசம்பர் 2013 -இல் சுமார் 64 என்ற அளவில் இருக்கும் என்று நாங்கள் யூகிக்கின்றோம். இந்த உறுதியான நிலை, தங்க விநியோகத்தைக் குறைத்து, உயர்வான தங்க இறக்குமதிகளுக்கு ஆதரவளிப்பதாக இருக்கும்." என்றும் குறிப்பிட்டுள்ளது.

"தங்க விலைகள் எழுச்சியடையலாம், ஆனால் தனது சுலப பணத்திட்டத்தை (QE) வாபஸ் பெற முடிவு செய்துள்ள யுஎஸ் ஃபெட்-இன் தீர்மானத்தினால் குறிப்பிட்ட அளவு வரையே இந்த உயர்வு இருக்கும். இந்த வருடத்தைய பருவ நிலை நன்றாக இருந்ததனால், விவசாயிகள் 7% அதிகமான பயிர்களை பயிரிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்சூழல் அதிகமான வருவாய்க்கு வித்திட்டு, இனி வரும் வாரங்களில் தங்கத்துக்கான மவுசை உயர்த்தும் என்றும் இந்த தகவலறிக்கை கூறுகிறது. சமீபத்திய வாரங்கள் மற்றும் மாதங்களில் கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறையின் மீதான தங்கத்தின் ஆதிக்கம் காரணமாக, தங்கத்துக்கான கிராக்கிக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலான தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold imports to pick up from this month: StanChart

Gold imports are likely to pick up significantly, fuelled by seasonal demand which will be well supported by a good monsoon, even though the government has taken aggressive steps to dampen its inward shipments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X