இந்தியாவின் ஜிடிபி 5.3% ஆகக் குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ஜிடிபி 5.3% ஆகக் குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில்
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில்(பிஎம்ஈஏசி), நடப்பு ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கிணங்க 5.3 சதவிதமாக ஆக குறைத்து மதிப்பிட்டுள்ளது.

2013-2014ற்கான பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிடும் போது, "2013-2014இன் பொருளாதார வளர்ச்சி 5.3% ஆக இருக்கும்" என பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (பிஎம்ஈஏசி) சேர்மன் ரங்கராஜன் தெரிவித்தார். இதே குழு கடந்த ஏப்ரல் மாத பிஎம்ஈஏசி திட்ட அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவிகிதம் என குறிப்பிடப்பட்டது. 2012-2013 நிதியாண்டில் ஜிடிபி 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. மேலும் 4.8% ஆக இலக்கிடப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது என இந்த ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்தது.

ரூபாய் மதிப்பு உறுதி நிலை அடையும் வரை, ஆர்.பி.ஐ தற்போதைய நிதியியல் நிலைப்பாட்டை தொடர்ந்து சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என பிஎம்ஈஏசி குழு குறிப்பிட்டது. இந்த மாத துவகத்தில் டாலருடனான ரூபாயின் மதிப்பு 68.81 வீழ்ச்சியடைந்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருந்தது. தற்போது 63.07 என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது.

வெளியுறவுத் துறை பற்றி குறிப்பிடுகையில், ஒரு வருடத்துக்கு முன்னர் 88.2 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி), இந்த நிதியாண்டில் 70 பில்லியன் டாலராக குறையும் என நம்பப்படுகிறது என டாக்டர் ரங்கராஜன் கூறினார்.

ரூபாய் பற்றி குறிப்பிடுகையில், "தற்போதைய ரூபாயின் நிலை சரிசெய்யப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி சந்தை உறுதியான நிலைக்குத் திரும்புகிறது. முதலீடுகள் நல்ல நிலைக்கு திரும்புவதாலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையத் துவங்குவதாலும், ரூபாயின் நிலைபாடு பலப்படுத்தப்படும்" என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM's Economic Advisory Council lowers GDP forecast to 5.3%

The Prime Minister's Economic Advisory Council (PMEAC) has lowered its GDP forecast to 5.3% for the current year, in line with revision of estimates by major FIIs and economists.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X