வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் முதலீடு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்களைத் தொடர்ந்து , வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்துள்ளதாக டச் வங்கி தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக நிதி நெருக்கடியின் காரணமாக, நாட்டில் எஃப்ஐஐ அவுட்ஃபுளோஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காணப்பட்ட வெளியேற்றங்களில் 25 சதவிகிதத்தை எஃப்ஐஐகள் ஈடுசெய்துள்ளனர் என முக்கிய உலக நிதி சேவைகள் மூலமாக தெரியவந்துள்ளது.

ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே இந்தியாவில் காணப்பட்ட 4 பில்லியன் டாலர் எஃப்ஐஐ அவுட்ஃபுளோ, ஒரு சரணடையும் அச்சநிலைக்கு வழிவகுத்தது என டச் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் முதலீடு!!

"ஆர்பிஐயின் கவர்னரான ரகுராம் ராஜனின், நாணயச் சந்தை தணிப்பு அறிக்கைகளை தொடர்ந்து, குறிப்பாக எஃப்சிஎன்ஆர் - பி பண்டமாற்று அறிவிப்புக்கு பின்னர், ரூபாய் மதிப்பு இழப்பிலிருந்து மீண்டு வருவதையும் மற்றும் கடந்த 8 வணிக தொடர்களில் வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகி உள்ளதையும் காணமுடிகிறது" என டச் வங்கி குறிப்பிட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் ஆர்வம், எஃப்சிஎன்ஆர்-பி, ஆதரவான வர்த்தக தரவுகள் மற்றும் கடன் சந்தைகளில் முதலீட்டு வசதிகளை இலகுபடுத்துதல் ஆகியவை பற்றிய சமீபத்திய அறிக்கைகளின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

"இந்த நடவடிக்கையின் விளைவாக, நிதியிடல் மற்றும் ஆக்ஸ்சுவல் சிஏடி ஆகிய இரண்டுக்குமான நீண்டநாள் தேவை மற்றும் நம்பகத்தன்மையை உக்குவித்தது." என டச் வங்கி கூறியது. மேலும், இந்த நடவடிக்கையின் முலம் சிரிய பிரச்சனையும் முதலீட்டாளர்கள் உள்ளீட்டுக்கு வழிவகுத்துள்ளது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் முதலீடு!!

டாலருடனான ரூபாய் மதிப்பு தற்போது 62 ஆக உள்ளது. கடந்த ஆகஸ்ட் 28அம் தேதி உள்நாட்டு நாணய மதிப்பு 68.85 ஆக வீழ்ச்சியுற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கடுமையான நாணயத் தேய்மானத்தை தொடர்ந்து பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் வலுபெற்றுள்ளது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs bought shares worth $1 b in 8 trading sessions

Foreign Institutional Investors (FIIs) have bought shares worth $1 billion in the past eight trading sessions following RBI Governor Raghuram Rajan’s recent announcements, a Deutsche Bank report said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X