இப்பொழுது குறுகிய கால கடன் நிதி திட்டங்களில் அதிகளவு வருவாய் பெறலாம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கி, கடந்த வாரம் மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிடி(எம்எஸ்எஃப்) விகிதத்தை குறைத்ததைத் தொடர்ந்து, அல்ட்ரா குறுகிய-கால நிதி போன்ற, குறுகியகால மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் அதிகளவு வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நிதி மேலாளர்கள் கூறுகின்றனர்.

 

"ஆர்பிஐ-யின் எம்எஸ்எஃப் விகித குறைப்பு காரணமாக, ஏனைய திட்டங்கள் மத்தியில், லிக்யூட் அல்லது அல்ட்ரா குறுகிய-கால நிதி போன்ற குறுகிய கால நிதி திட்டங்களுக்கு பயன் உள்ளது. ஆர்பிஐ மேலும் எம்எஸ்எஃப் விகிதங்களைக் குறைக்கும் அறிகுறி இருப்பதால், இவ்வாறான திட்டங்களில் அதிக வருவாய் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்" என ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸ்ட் இன்கம் பிரிவின் தலைவர் ஆர். சிவகுமார் தெரிவித்தார்.

 
இப்பொழுது குறுகிய கால கடன் நிதி திட்டங்களில் அதிகளவு வருவாய் பெறலாம்!!!

கடந்த வெள்ளியன்று அறிவிக்கிப்பட்ட ஆர்பிஐ-யின் இடைக்கால நிதிகொள்கையில், எம்எஸ்எஃப் விகிதம் 0.75% குறைக்கப்பட்டு 9.5 சதவிகிதமாகவும் மற்றும் தினசரி சிஆர்ஆர் விகிதம் 99 சதவிகிதத்திலிருந்து 95 சதவிகிதம் ஆகவும் குறைக்கப்பட்டதன் காரணமாக, கவர்னர் ரகுராம் ராஜன் லிக்விடிட்டியை அதிகரித்துள்ளார்.

எனினும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ ரேட், 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 7.5 சதவிகிதமாக உள்ளது.

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸ்ட் இன்கம் பிரிவின் தலைவர் அமித் திருப்பதி கூறுகையில், எம்எஸ்எஃப் விகித குறைப்பு, குறுகிய-கால திட்டங்களில் ஈட்டத்தை இலகுவாக்கும் மற்றும் நீண்ட-கால முதலீட்டுப் பத்திரங்களின் ஈட்டத்தை ஊக்குவிக்கும் என தெரிவித்தார். எம்எஸ்எஃப் குறைப்பு காரணமாக லிக்யூட் ஃபண்ட்டுகள் போன்ற குறுகியகால கடன் திட்டங்களின் ஈட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

ஃபண்ட்ஸ் இந்தியா

"எம்எஸ்எஃப் 9.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக, ஷார்ட் - என்ட் நாணய சந்தை திட்ட விகிதங்கள் இலகுவாக்கப்படும். இது, குறுகிய-கால கடன் நிதி விலைகளில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்" என ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி வித்யா பாலா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Short-term debt funds may see higher return on RBI steps

Mutual fund schemes with short-term investment horizon like liquid or ultra short-term funds are likely to witness higher returns going ahead following reduction in the marginal standing facility (MSF) rate by the central bank over the weekend, say fund managers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X