டாடா சன்ஸ்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 6 புதிய இயக்குனர்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிதாக விமான சேவையை துவங்க உள்ள டாடா எஸ்.ஐ.ஏ. ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவன குழுமத்தில் 6 இயக்குனர்கள் இருப்பார்கள் என்று டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், வெளிநாட்டு முதலீடு உயர்வு குழுமத்திற்கு (FIPB) அனுப்பிய படிவத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் படி நான்கு இயக்குனர்களை டாடா சன்ஸ் நியமிக்கும். மற்ற இரண்டு இயக்குனர்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நியமிக்கும். இந்த குழுமத்தின் தலைவராக இருக்கப் போவது டாடா நிறுவனத்தை சேர்ந்த ஒருவராக இருக்கும் என்று இரண்டு நிறுவனங்களும் அந்த படிவத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு நெறிமுறைகளுக்கு ஒத்துப் போகும் விதமாக, டாடா-எஸ்.ஐ.ஏ நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்களில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களாக இருப்பார்கள்.

ஆய்த எழுத்து போன்ற மூன்று இயக்குனர்கள்

ஆய்த எழுத்து போன்ற மூன்று இயக்குனர்கள்

டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் புரிதலுக்காக தயாரிக்கப்பட்ட குறிப்பாணையின் படி, தொடக்க நிலையில் இந்த கூட்டு நிறுவனங்களில் மூன்று இயக்குனர்கள் நியமிக்க படுவார்கள். டாடா சன்ஸ் பிரசாத் மேனன் மற்றும் முகுந்த் ராஜனை நியமிக்கும். எஸ்.ஐ.ஏ நிறுவனம் அதன் மூன்றாம் இயக்குனராக மாக் ஸ்வீ வாஹ் அவர்களை நியமிக்கும். இந்த கூட்டு குழுமத்திற்கு பிரசாத் மேனன் தலைமை வகிப்பார். சிறிது காலம் கழித்து இந்த எண்ணிக்கை ஆறாக உயரும்.

எஸ்.ஐ.ஏ. நிறுவனத்தின் பங்கு

எஸ்.ஐ.ஏ. நிறுவனத்தின் பங்கு

டாடா சன்ஸ் மற்றும் எஸ்.ஐ.ஏ. நிறுவனங்கள் இனைந்து செயல்படும் முறைகளை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஏ. நிறுவனம் அதன் உலகளாவிய வலையமைப்புக்கு இந்த புதிய விமான சேவைக்கு நுழைவுரிமை வழங்குகிறது. மேலும் கூட்டு நிறுவனத்தின் நுண்திறமையை வளர்ப்பதற்கு எஸ்.ஐ.ஏ. அதன் உயர் தொழில்நுட்ப அதிகாரிகளை கொண்டு செயல்படுத்தப் போகிறது. மேலும் தன்னுடைய விற்பனையாளர்களிடம் இருந்தே விமானம், பொறியியல் சேவைகள், உதிரி பாகங்கள் மற்றும் அடிப்படை வசதிககளை வாங்குவதால் இதர செலவையும் கட்டுப்படுத்தும். மேலும் சிவில் வானூர்தி தொழிற்சாலையில் கடைபிடிக்கும் சிறந்த நடைமுறை வழக்கங்களை பின்பற்ற தன்னுடைய தொழில் நுட்ப நிபுணத்துவம் மற்றும் செய்நுட்ப அறிவையும் எஸ்.ஐ.ஏ நிறுவனம் இந்த கூட்டு நிறுவனத்தில் உபயோகிக்க போகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு
 

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு

டாடா சன்ஸ் தன் பங்கிற்கு இந்த கூட்டு முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில் இந்திய சந்தை பற்றிய தன்னுடைய அறிவை அளிக்கும். மேலும் தன்னுடைய மற்ற நிறுவனங்களுடன் இந்த கூட்டு நிறுவனம் இணைந்து செயல்படவும் உறுதுணையாக இருக்கும். மேலும் தன் விற்பனையாளர்கள் தனக்கு அளிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொருளாதார அளவுகோல் பற்றிய விவரங்களையும் இந்த கூட்டு நிறுவனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும்.

100 மில்லியன் டாலர் முதலீடு

100 மில்லியன் டாலர் முதலீடு

டாடா சன்ஸ் இந்தியாவில் விமான சேவையை தொடங்க எஸ்.ஐ.ஏ-வுடன் கடந்த வியாழக்கிழமை கூட்டு ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முதல் கட்ட முதலீட்டாக 100 மில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளது. டாடா குழுமம் 51 சதவீத முதலீட்டை இக்கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து தன் ஆதிக்கத்தை செலுத்தும். மீதமுள்ள 49 மில்லியன் டாலரை எஸ்.ஐ.ஏ. முதலீடு செய்யும்.

டெல்லியில் தலைமையகம்

டெல்லியில் தலைமையகம்

மேலும் இக்கூட்டு நிறுவனம் புது டெல்லியில் தொடங்கப்படும். மேலும் தொழில் நடத்தும் முதன்மையான இடமாக இந்திய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் பல சிக்கல்கள் இருப்பதால் டெல்லியை தன்னுடைய செயல்முறை மையமாக தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் இங்கே அனைத்து அடிப்படைவசதிகளும் கிடைக்கிறது.

சர்வதேச விமானங்களை இயக்க விருப்பம்

சர்வதேச விமானங்களை இயக்க விருப்பம்

அரசாங்கம் அனுமதி அளித்தால் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க விருப்பம் உள்ளதாக டாடா-எஸ்.ஐ.ஏ. நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tatas to nominate 4 of the 6 directors

The board of the proposed Tata SIA Airlines Ltd would eventually have six directors, Tata Sons and Singapore Airlines have said in an application to the Foreign Investment Promotion Board.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X