கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் எப்பவுமே ரிஸ்க் தான் பாஸ்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்கள், வங்கி டெபாசிட்கள் போலன்றி பாதுகாப்பற்றவையாகும். இவற்றிற்கு நிறுவனத்தின் சொத்துக்களைக் கொண்டு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. அதனால், ஒரு நிறுவனம் திவாலாகும் பட்சத்தில், உங்களின் ஒருமித்த அசல் தொகை மற்றும் வட்டித் தொகையை இழக்க வேண்டி இருக்கும் என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள உங்களை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.

தனியார் பத்திரிக்கை ஒன்று அதன் சமீபத்திய வெளியீட்டில் தனி நபர்கள், சுமார் மூன்று நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்யப்பட்ட தங்களின் பணத்தை எவ்வாறு இழந்துள்ளனர் என்பதைப் பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. இவற்றுள் ஒரு நிறுவனம் பிரபல தொழிலதிபர் ஒருவரால் விளம்பரம் செய்யப்பட்டதாகும். மேலும் இவ்வருட துவக்கத்தில், பிர்லா பவர் நிறுவனம் டெபாசிட் தவணைகளை ஒழுங்காக அளிக்கவில்லை எனக் கூறி அந்நிறுவனத்துக்கு எதிராக லெண்டர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் குட்ரிட்டர்ன்ஸ்.இன்-இலிருந்து நாங்கள் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டை சிறப்பானதாக பரிந்துரைக்கும் போது, கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்கள் அபாயகரமானவை என்று குறிப்பிடத் தவறுவதில்லை. ஆயினும், தற்போது புழக்கத்தில் இருக்கும் சில ஃபிக்ஸட் டெபாசிட்களான ஹெஸ்டிஎஃப்சி, பிஎன்பி ஹவுஸிங், கேரளா ட்ரான்ஸ்போர்ட் டெவலப்மென்ட் ஆகியவற்றின் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மிகவும் பாதுகாப்பனவையே.

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் எப்பவுமே ரிஸ்க் தான் பாஸ்!!!

ஏன் முதலீட்டாளர்கள் பெருத்த ஏமாளிகளாக இருக்கின்றனர்?

இதுவரை நாம் பல பொன்ஸி திட்டங்களை பார்த்திருப்போம், குறிப்பாக ப்ளான்ட்டேஷன் மற்றும் சமீபத்தில் மக்களை ஏமாற்றிய சாரதா குழுமத் திட்டம் இவ்வாறு பல திட்டங்கள் புஸ்வாணமாகிப் போனதை நாம் கண்டிருக்கிறோம். ஆனாலும், பிற முதலீட்டாளர்களின் இழப்புகளிலிருந்து நாம் பாடம் கற்க தவறி விடுகிறோம். சுமார் 2 முதல் 3 சதவீதம் வரையிலான கூடுதல் லாபத்தைப் பெற ஆசைப்பட்டு மீண்டும் மீண்டும் அதே வலையில் சிக்கிக் கொள்கிறோம். கூடுதல் லாபத்திற்காக இவ்வளவு அபாயகரமான முதலீட்டில் இறங்கும் அளவிற்கு தகுதி வாய்ந்தது தானா என்பதை பின்வரும் உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

உதாரணம்

நீங்கள் சுமார் 1 லட்சம் ரூபாயை, நிதி அடிப்படையில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒரு நிறுவனத்தில், வருடத்திற்கு 12% என்ற வீதத்தில் டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதே தொகையை நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்திருந்தால், தற்போது வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதமான 9.5% மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு வருடம் முழுமையாக நிறைவடையும் போது, வங்கி டெபாசிட்டிலிருந்து நீங்கள் பெறக்கூடிய தொகையைக் காட்டிலும் சுமார் 2,500 ரூபாயை அதிகமாகப் பெறுவீர்கள். ஆனால், நிறுவனம் தவணைகளை செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படும் பட்சத்தில், நீங்கள் டெபாசிட்டாக செலுத்திய 1 லட்சம் ரூபாயோடு அதுவரை வட்டியாக சேர்ந்த தொகையையும் இழக்க வேண்டியிருக்கும். வெறும் 2,500 ரூபாயை கூடுதலாகப் பெறுவதற்காக சுமார் 1,12,500 ரூபாயை (அசல் + வட்டித்தொகை) பணயம் வைக்கத்தான் வேண்டுமா என்பதை யோசித்துப் பாருங்கள். வங்கி எஃப்டி மூலம், எவ்வித இடர்பாடுகளும் இன்றி நீங்கள் பாதுகாப்பான முறையில் 1,9,500 ரூபாயைப் பெறலாம்.

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் எப்பவுமே ரிஸ்க் தான் பாஸ்!!!

அனைத்து ஃபிக்ஸட் டெபாசிட்களும் ஒரே தூரிகையைக் கொண்டே வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது இங்கே மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

உதாரணமாக, வங்கிகள் அளிக்கக்கூடிய வட்டி விகிதத்தைக் காட்டிலும் அதிகமான வட்டியை வழங்கி வரும் கேரளா ரோட் ட்ரான்ஸ்போர்ட்-இன் ஃபிக்ஸட் டெபாசிட்கள் நம்மிடையே தற்போது புழக்கத்தில் உள்ளன. இது கேரளா அரசுக்குச் சொந்தமான ஒரு அமைப்பாகும்; அதனால் இது தவணைத் தொகைகளை வழங்காமல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் தேசிய வங்கியின் துணை நிறுவனமான பிஎன்பி ஹவுஸிங்கின் நிலையும் இதுவே.

தெளிவாக சொல்வதானால், வங்கி டெபாசிட்களைக் காட்டிலும் கம்பெனி டெபாசிட்களில் சற்று கூடுதலாகக் கிடைக்கக்கூடிய தொகையைப் பெறும் ஆர்வத்துடன் நீங்கள் இருந்தால், அதற்கு முன் சில ஆய்வுகளை நீங்கள் செய்ய வேண்டியது அவசியம். இதற்கிடையே, சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை யார் பரிந்துரை செய்தாலும், அதில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நலம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Company fixed deposits: Time to be cautious as defaults rise

Company fixed deposits, unlike bank fixed deposits are highly unsafe and not secured against any assets of the company. Thus, in the event of a company going bankrupt, brace yourself for losing accumulated principal and the interest amount.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X