கொல்கத்தாவில் முதன் முறையாக 4.15 லட்ச சதுர அடியில் லக்ஸுரி மால்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தைச் சேர்ந்த க்வெஸ்ட் மால் திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்கத்தாவும் லக்ஸுரி மால் வாய்க்கப்பெற்ற இந்தியாவின் மூன்று மெட்ரோ நகரங்களின் வரிசையில் இடம்பெற உள்ளது.

 

அடுத்த வாரம் திறக்கப்படவுள்ள இந்த மால், கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் சிஇஎஸ்சி குழுமத்தின் துணை நிறுவனமான சிஇஎஸ்சி ப்ராப்பர்ட்டீஸ் லிமிட்டட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மால் சுமார் 7.2 லட்சம் சதுர அடியில் கட்டுமான இடத்தையும், சுமார் 4.15 லட்சம் சதுர அடியில் சில்லறை விற்பனைக்கான இடத்தையும் கொண்டிருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

 

ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தைச் சேர்ந்த இந்த மால் சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலானது. இந்த அங்காடியில் பன்முக வர்த்தக முயற்சியாக லைஃப்ஸ்டைல் மற்றும் ஸ்பென்சர் ரீடெய்ல் ஆகிய நிறுவனங்கள் முக்கியமான இடத்தை கொண்டிருக்கும், மேலும் இந்த மாலில் குறைந்தது ஒன்பது சர்வதேச பிராண்ட்கள் தங்களின் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளன.

கொல்கத்தாவில் முதன் முறையாக 4.15 லட்ச சதுர அடியில் லக்ஸுரி மால்!!!

"இந்த புதிய மால், நகரின் (கொல்கத்தாவின்) வர்த்தகத்திற்கு ஊட்டமளித்து, நாட்டின் வசீகரமான வர்த்தக மையங்களுள் ஒன்றாக இந்நகரின் பிம்பத்தை மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாகும்." என்று இக்குழுமத்தின் சேர்மனாகிய திரு சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.

இப்போதைக்கு, இந்தியாவின் பெரிய நகரங்களுள், கொல்கத்தா, ஹைதராபாத், அஹமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் லக்ஸுரி மால்கள் கிடையாது.

இந்தியாவுக்குள் நுழைந்து தங்களின் கிளையைப் பரப்பும் உத்வேகத்துடன் இருக்கக்கூடிய உலகளாவிய லக்ஸுரி வியாபாரிகள், லக்ஸுரி ரீடெயில் வணிகத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும் இட அமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அண்மையில் இருக்கக்கூடிய பிரத்யேக பிராண்டுகளின் ஸ்டோர்கள் போன்றவற்றினால், இந்தியாவிலிருக்கும் வணிக வளாகங்களில் தமக்கேற்றவாறு இடம் கிடைக்குமா என்பதைப் பற்றி பல்வேறு விதமான ஐயப்பாடுகளுடன் இருப்பதாக குஷ்மன் & வேக்ஃபீல்டு நிறுவனத்தின் தெற்காசியப் பிரிவின் செயல்துறை நிர்வாக இயக்குனரான சஞ்சய் தத்தா கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kolkata to get its first luxury mall

Kolkata will join the league of other three metros in getting a luxury mall with the scheduled opening of Quest mall from the RP-Sanjiv Goenka Group.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X