மார்ஜினல் ஸ்டான்டிங்க் ஃபெசிலிடி (எம்எஸ்எஃப்) என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2011-2012 நிதியாண்டில், ஆர்பிஐயின் நிதி கொள்கை மறுஆய்வின் போது கொண்டுவரப்பட்ட ஒரு புதிய நிதி முறை (சாதனம்), எம்எஸ்எஃப் எனப்படும். இது வங்கிகளுக்கிடையிலான தினசரி வணிகத்தின் போது, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரிசெய்வதற்காக அறிமுகப்படுத்தப்ட்ட ஒரு வசதி ஆகும்

வர்த்தக வங்கிகள் தமது நெட் டமாண்ட் மற்றும் டைம் லயபிலிடி (என்ட்டிடிஎல்) நிலுவைக்கு ஏற்றவாறு, அதிகபட்சமாக 1% வரை கடன் பெறுவதை அனுமதிக்கும் ஒரு வசதி தான் இந்த மார்ஜினல் ஸ்டான்டிங்க் ஃபெசிலிடி ஆகும். மேலும், எக்ஸெஸ் ஸ்டச்சுட்ரி லிக்யூடிட்டி ரேஷியோ (எஸ்எல்ஆர்) அடிப்படையிலும் வர்த்தக வங்கள் நிதி பெற முடியும். வங்கிகளுக்கு இடையிலான வர்த்தக சந்தையில், சர்விஸ் அசட்-லயபிலிடி ஏற்றத்தாழ்வு அல்லது பண பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், ஆர்பிஐயிடமிருந்து, எம்எஸ்எஃப் விகிதத்தில் வங்கிகள் கடன் பெற முனைகின்றன.

ஆர்பிஐயிடருந்து நிதி பெறுவதற்கு, வர்த்தக வங்கிகள் பயன்படுத்தும் கொலட்ரெல் (பிணையம்) மதிப்பின் அடிப்படையில், குறிப்பிட்ட சதவிகிதம் மார்ஜினாக செலுத்துவதன் மூலம் எம்எஸ்எஃப் வசதியின் கீழ் வங்கிகள் கடன் பெற முடியும். உதாரணமாக, அரசு கடன் பத்திரங்களை பிணையமாக வைத்து, ஆர்பிஐயிடமிருந்து வங்கிகள் கடன் பெற்றால், 5% மார்ஜின் அடிப்படையில் கட்டணத்தை செலுத்த வேண்டும், அல்லது மாநில வளர்ச்சி கடன் பத்திரங்களை ஈடாக வைத்து கடன் பெற்றால், 10% மார்ஜின் அடிப்படையில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மார்ஜினல் ஸ்டான்டிங்க் ஃபெசிலிடி (எம்எஸ்எஃப்) என்றால் என்ன?

இந்த வசதியின் கீழ், குறைந்தபட்ச தொகையாக ரூ.1 கோடியும், அதற்கு மேல் 1 கோடியின் மடங்குகளாகவும், வங்கிகள் கடன் பெற முடியும். ஆர்பிஐயிடமிருந்து, வர்த்தக வங்கிகள் கடன் பெறும் விகிதமான ரெப்போ விகிதத்துக்கு மேலாக, 100 அடிப்படைப் புள்ளிகள் (ஒரு அடிபடைப் புள்ளி என்பது நூற்றில் ஒரு சதவிகித புள்ளி) எம்எஸ்எஃப் வட்டி விகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, லிக்யூடிட்டி அட்ஜஸ்ட்மென்ட் வசதி அல்லது எல்ஏஎஃப்-இன் படி, ரெப்போ விகிதத்தை விட உயர்வான வட்டி விகிதத்தில், லிக்யூடிட்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, ஆர்பிஐயிடமிருந்து வர்த்தக வங்கிகள் கடன் முடியும்.

ரெப்போ மற்றும் ரிவேர்ஸ் ரெப்போ ஆகிய இரண்டு அம்சங்கள் மூலம். வங்கிகள் தமது தினசரி லிக்யூடிட்டி வேறுபாட்டை கண்காணிக்க எல்ஏஎஃப் உதவுகிறது. இந்த வகையில், நிதி பற்றாக்குறை ஏற்படும் போது, ரெப்போ விகிதத்தில் ஆர்பிஐயிடமிருந்து வங்கிகள் கடன் பெறுகின்றன. மாறாக, வங்கி வணிகத்தில் உபரித்தொகை(சர்ப்ளஸ்) இருக்கும் சமயத்தில், ரிவேர்ஸ் ரெப்போ விகிதத்தில், ஆர்பிஐக்கு நிதி வழங்குவதன் மூலம், வர்த்தக வங்கிகள் வட்டி வருமானம் ஈட்டுகின்றன.

சமீபத்திய ஆர்பிஐ நிதி கொள்கையில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில், டாலர் கொள்முதலின் ரூபாயின் வணிக செயல்பாட்டை சீர்செய்ய, லிக்யூடிட்டி டைடனிங் நடவடிக்கையாக, மார்ஜினல் ஸ்டான்டிங்க் ஃபெசிலிடி 10.25% ஆக உயர்த்தப்ப்பட்டது. இருப்பினும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு திடமான நிலைக்கு திரும்பியதால், ஆர்பிஐ 75 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து எம்எஸ்எஃப் விகிதத்தை 9.5% ஆக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Marginal Standing Facility or MSF?

MSF is a new monetary tool that came into existence in the monetary policy review for the financial year 2011-2012. The tool serves to reduce the degree of volatility in the inter-bank overnight market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X