கடன் செலுத்தாதோர் பட்டியலில் இருந்து ஈரானை நீக்கியது உலக வங்கி!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலக வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான் தனது நிலுவை கடன் தொகையை செலுத்தியதை தொடர்ந்து அந்நாட்டை டெட்பீட் கடனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

 

உலக வங்கியின், சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை " இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான் நிலுவையில் உள்ள கடன் தொகையை செலுத்தியதை தொடர்ந்து, அந்நாட்டின் கடன் தகுதியை செயற்படா நிலையில் இருந்து செயல் நிலைக்கு மாற்றியது" என அத்துறை தெரிவித்தாது.

 
கடன் செலுத்தாதோர் பட்டியலில் இருந்து ஈரானை நீக்கியது உலக வங்கி!!!

உலக வங்கி கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று ஈரான் நாட்டு தனது 6 மாத நிலுவை தொகையான 79.1 மில்லியன் டாலர் மற்றும் 700 மில்லியன் டாலர் கடன் தொகையை செலுத்த தவறிய காரணத்தினால் அந்நாட்டு கணக்கை செயற்படா நிலையில் வைப்பதாக அறிவித்தது.

டெட்பீட் கடனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை தொடர்ந்து அந்நாடு செலுத்திய தொகையை உலக வங்கி வெளியிடவில்லை, ஆனால் கடன் தொகையாக இன்னும் 616 மில்லியன் டாலர் இருப்பதாக தெரிவித்தது. மேலும் ஈரான் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் எந்த கடனும் பெறவில்லை.

தெஹ்ரான் செயல்படுத்தி வரும் அணுசக்தி திட்டங்கள் உலக அமைதிக்கு மட்டுமே என்று ஈரான் வலியுறுத்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank removes Iran from list of non-payers

The World Bank removed Iran from its list of deadbeat borrowers Friday, saying the Islamic Republic had paid outstanding loan amounts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X