பிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..!
டெல்லி: ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) அதன் 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் வருங்கால வைப்புகளுக்கு, 2012-13 நிதியாண்டில் வழங்கிய வட்டி விகிதம் 8.5 சதவீதத்தை விட இந்த நிதி ஆண்டில் உயர்வான வட்டி விகிதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (ஈபிஎஃப்ஓ) சந்தாதாரர்களின் பிஎஃப் வைப்புகளுக்கான வட்டி வருமான விகிதம் கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.5% விட இந்த நிதி ஆண்டு சற்று உயர்வாக இருக்கும்" என ஒரு அறிக்கை கூறுகிறது.

வட்டி வருமான விகிதம் 8.5 சதவிகிதத்தை விட சற்று உயர்வாக வழங்குவதால், ஈபிஎஃப்ஓவுக்கு எந்தவித பற்றாக்குறையோ அல்லது உபரித் தொகையோ இருக்காது என் அவர் கூறினார். 2010-11 நிதியாண்டில் இந்த நிறுவன கணக்கில் ரூ. 1,761 கோடி காணப்பட்டதால், வட்டி விகிதமாக 9.5% வழங்கப்பட்டது.

இந்த வட்டி விகிதத்தை அங்கிகரிப்பதற்காக, நிறுவனத்தின் தலைமை தீர்ப்பாய அமைப்பான, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான, சென்ரல் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் (சிபிடி)ஐ ஒரு கூட்டத்துத்துக்கு அழைக்கும் செயல்பாட்டில் இந்த நிறுவனம் உள்ளது.

சிபிடிக்கு வட்டி விகிதத்தை பரிந்துரைக்கும் ஈபிஎஃப்ஓவின் ஆலோசனை அமைப்பான, நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியை (எஃப்ஐசி) டிரஸ்டீ, இந்த கூட்டத்தின் போது மாற்றியமைப்பார்.

ஜூன் மாதத்தில் ஈபிஎஃப்ஓ மூலம் சிபிடி மாற்றியமைக்கப்பட்ட பின்னர், ஈபிஎஃப்ஓவின் துணை-செயற்குழுக்களான எஃப்ஐசி போன்றவை கலைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்த திட்டம் அங்கிகரிக்கப்பட்டவுடன், நிதி அமைச்சர் முன்னிலையில் உடன்பாட்டுக்காக வைக்கப்படும்.

இந்த நிதியாண்டின் வருங்கால வைப்புக்கள் மீதான வட்டி விகிதம் தீபாவளிக்கு முன்னர் அறிவிக்கப்படலாம் என ஆதாரங்களின் படி தெரியவந்துள்ளது. இருப்பினும், நடைமுறைப்படி இது நிதியாண்டின் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக இது நடைபெறவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news, EPFO may offer more than 8.5% interest this year

Retirement fund body EPFO may announce higher interest rate on provident fund deposits for its over five crore subscribers in the current fiscal than 8.5 per cent that was provided in 2012-13
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X