ஐஎஸ்டி கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனம் உயர்த்தியுள்ளது!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலை தொடர்பு துறையில் பெரும் புள்ளியான ஏர்டெல் நிறுவனம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக, சர்வதேச அழைப்புக்குரிய (ஐஎஸ்டி) கட்டணத்தை 80 சதவீதம் வரை இம்மாதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இதே போல் மற்றொரு பெரிய நிறுவனமான ஐடியாவும் சர்வதேச அழைப்பின் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தன்னுடைய இணையதளத்தில் அறிவித்துள்ளது.

 

இரண்டு நிறுவனத்தின் இணையதளங்களில் கிடைத்த தகவலின் படி, அமெரிக்கா, இங்கிலாந்த மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கான அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 8 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு 6.40 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ஐஎஸ்டி கட்டணங்களை ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனம் உயர்த்தியுள்ளது!!!

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சிறப்பு சேவையை பயன்படுத்தி செய்யும் அழைப்புகளான கட்டணத்தை அக்டோபர் 10ஆம் தேதி முதல் 80 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ISD எண்கள் 6113 மற்றும் 6114-ஐ கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்கு வசூலிக்கப்பட்ட 100 ருபாய் இப்போது 180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

"டாலரின் விலை அதிகரித்து கொண்டே போவதால், ISD பிரிவில் விலையை கட்டுப்பாட்டில் வைப்பதில் பாரதி ஏர்டெல் நிறுவனம் பெரிய அழுத்தத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஏற்பட்டுள்ள கூர்மையான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, ISD கட்டணங்களை திரும்பவும் வடிவமைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது", என்று ஏர்டெல்லை சேர்ந்த அலுவலர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஐடியா செல்லுலர் நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு கருத்தும் இது வரை தெரிவிக்கப்படவில்லை.

வெளிநாடுகளுக்கு செய்யும் அழைப்புகளுக்கான கட்டணத்தை நிமிடத்திற்கு 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக மாற்றியுள்ளதாக இந்த இரண்டு நிறுவனத்தின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் நிமிடத்திற்கு 15 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்பட அழைப்புகளுக்கு 17-20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு 50 ரூபாயாக கட்டணம் வசூல் செய்யப்பட ISD அழைப்புகளுக்கு இப்போது 60 ரூபாயாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதே போல் 100 ரூபாய் வசூல் செய்யப்பட அழைப்புகளுக்கு இனி 120 ரூபாய் வசூல் செய்யப்படும்.

ஜெர்மனியில் சில இடங்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு பழைய கட்டணத்தையே வசூல் செய்கிறது ஏர்டெல் நிறுவனம். ஜெர்மனியின் இன்னும் சில பகுதிகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது ஐடியா நிறுவனம். ஜெர்மனியின் சில பகுதிகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டெல் நிறுவனத்தை விட 88 சதவீதம் குறைவாகத் தான் கட்டணம் வசூல் செய்கிறது ஐடியா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel raises ISD rates up to 80%, Idea Cellular by 25%

Telecom major Airtel has increased international call rates by up to 80 per cent this month mainly due to the impact of depreciation in rupee.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X