வங்கி பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?? நட்டமா??

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில நேரங்களில் விபரித முடிவுகளும் நமக்கு சாதகமாக அமையும். இத்தகைய தருணங்களை நாம் வாழ்கையில் பல இடங்களை சந்தித்து இருப்போம். அதேபோல் பங்கு சந்தையில் முதலீடு செய்வதென்பது சுலபமான காரியம் இல்லை, ஒரு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் முன் அதைபற்றி பல கோணங்களில் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

பங்கு முதலீட்டாளர்கள் சிலர் சந்தையின் போக்கிற்கு மாறாக செயல்படுவர். இவர்களது முடிவுகள் விபரிதமாக இருந்தாலும் சில நேரத்தில் லாபங்களை அள்ளித் தரும், அதோபோல் சில நேரத்தில் நம் காலையும் வாரிவிடும். ஆறு மாதங்களுக்கு முன்பு ஐடி துறை பங்குகளின் நிலை சற்று கவலைக்கிடமாகவே இருந்தது ஆனால் இப்பொழுது அதன் நிலை தலைகீழ்.

ஐடி துறை பங்குகளில் 6 மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இப்பொழுது 50 சதவிதம் லாபம் கிடைத்திருக்கும்.

வங்கி துறை

வங்கி துறை

ஐடி துறை நிலையை ஒத்தது தற்போதின் வங்கி துறை பங்குகள். சில தனியார் வங்கிகள் 2ஆம் காலாண்டில் அதிகபடியான லாபத்தையே காட்டின. குறிப்பாக இன்டஸ்இன்டு வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளின் காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது.

பொது துறை வங்கிகள்

பொது துறை வங்கிகள்

ஆனால் சில பொது துறை வங்கிகள் செயற்ப்படா சொத்துக்களாக விளங்குகிறது. இத்தகைய வங்கிகளும் அடுத்த வரும் சில காலாண்டுகளில் இயல்பு நிலைக்கு திரும்பும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

5% - 9% வரை லாபம்

5% - 9% வரை லாபம்

பொது துறை வங்கிகளில் சில 5 முதல் 9 சதவீதம் வரை லாபம் இட்டியுள்ளது என்பது முக்கியமான ஒன்று. மேலும் சில வங்கிகளின் பங்கு விலை புத்தக விலையை விட குறைவாக உள்ளது என்பது, இவ்வங்கிகள் முதலீட்டாளரை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.

லாபம் தரும் துறைகள்

லாபம் தரும் துறைகள்

தற்போதுள்ள சூழலில் ஐடி, பார்மா மற்றும் எஃப்எம்சிஜி போன்ற துறை பங்குகளில் முதலீடு செய்யதால் லாபம் நிச்சியம், ஆனாலும் வங்கி துறை பங்குகள் கடந்த வாரம் முதல் விற்பனையில் சூடுபிடித்துள்ளது இதனால் இத்துறையில் முதலீடு செய்தால் அபத்து குறைவே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banking shares may offer good value

It's sometimes a good idea to take a contrarian call. Exactly six months ago, if you had to take a contrarian bet on IT stocks, you would have got stupendous returns, in most cases about 50 per cent.
Story first published: Thursday, October 17, 2013, 13:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X