திருவிழா காலத்தில் கடன் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி??..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: புதிய பொருட்களை திருவிழா காலங்களில் வாங்குவதை மங்களகரமாக கருதுகின்றனர் நம் மக்கள். இந்த திருவிழா நேரத்தில் புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை எப்படியாவது மக்களை வாங்க வைக்க அனைத்து நிதி நிறுவனங்களும் பல வணிக உத்திகளை பயன்படுத்துகின்றனர். வண்ணமயமான தள்ளுபடிகள் மற்றும் விலை குறைப்புகள் போன்ற உத்திகளை பலரும் இப்போது கையாண்டு வருகின்றனர். நீங்கள் பொருட்கள் வாங்க தேவைப்படும் கடனுக்கு வட்டி அதிகமாக இருந்ததால் வாங்கும் என்னத்தை தள்ளி போட்டு கொண்டே இருந்தீர்களா? அப்படியானால் நீங்கள் வாங்க வேண்டிய தருணம் இதுவே.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது

விலைகுறைப்பு அல்லது தள்ளுபடியை மட்டுமே நம்பி இருக்க கூடாது. ஏனென்றால் விளிம்பு நிலை தள்ளுபடி கிடைக்கும் பொருட்களின் மீது உங்களுக்கான தேவை என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் வருமனாத்தின் ஒரு பகுதியை கடனுக்கு நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட காலம் வரை EMI கட்ட வேண்டியிருக்கும். அதனை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் பொருட்களை வாங்க தீர்மானிக்கவும்.

இரண்டாவதாக நீங்கள் மனதில் வைத்துக் கொள்வது

எப்படி பட்ட விலை குறைப்பு உங்களுக்கு பயனை அளிக்கும் என்பது. உதாரணத்திற்கு குறைந்த வட்டியில் வீட்டு கடன் கிடைக்கும் போது அதனுடன் சேர்த்து செயல்பாடு கட்டணம் மற்றும் ஆவணமாக்கல் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய திட்டம் உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை, ஒரு முறையாக கட்ட வேண்டிய செயல்படுத்தும் கட்டணம் மற்றும் ஆவணமாக்கல் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக வருடக்கணக்காக திருப்பி கட்ட வேண்டிய வட்டி தொகையை இன்னமும் குறைக்க பரிந்துரைக்கலாம்.

திருவிழா காலத்தில் கடன் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி??..

சில்லறை வர்த்தகத்தில் இருந்து கடன் அடிப்படையில் பொருட்களை வாங்க வைத்து வியாபாரத்தை அதிகரிக்க பல ஈர்ப்புள்ள தள்ளுபடி மற்றும் விலை குறைப்புகளை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அளித்து வருகிறது. உதாரணத்திற்கு வீட்டு கடன் வாங்கும் நபர்களுக்கு பயன் தருமாறு 10.20% வட்டி விகிதத்தில் வாகனம் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் கடனை அளிக்கிறது இந்தியன் வங்கி.

இருப்பினும் இந்த விலை குறைப்பு வேண்டுமானால் இரண்டு கடனையும் சேர்த்து பெற்றால் தான் கிடைக்கும். உங்களுக்கு நிஜமாகவே தேவைபடுகிறது என்றால் இந்த இரண்டு கடன்களையும் பெற்று கொள்வது நல்லது. ஆனால் இவைகளுக்கு கட்டும் EMI நீங்கள் வாங்கும் சம்பளத்தில் 40 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் மட்டுமே இந்த கடன்களை வாங்க வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வாகனங்களுக்கு 10.75% வட்டி விகிதம் வசூலிக்கும் பாரத ஸ்டேட் வங்கி இக்காலத்தில் 10.55% வட்டி மட்டுமே வசூல் செய்கிறது. பொதுவாக கடன் தொகையில் இருந்து 0.51 சதவீதத்தில் வசூல் செய்யப்படும் செயல்பாடு கட்டணம், இப்போது வெறும் 500 ரூபாயாக வசூல் செய்யப்படுகிறது. இந்த வங்கியில் தன் சம்பள கணக்கை வைத்திருப்பவர்களுக்கு விசேஷ சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி அவர்களுக்கு 12.05 சதவீதமாக வட்டி வசூல் செய்யப்படுகிறது. இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 31, 2014 வரை செல்லுபடியாகும்.

கார்ப்பரேஷன் வங்கியும் கூட க்ராண்ட் பெஸ்டிவல் போனான்சா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஜனவரி 31, 2014 வரை செல்லுபடியாகும். வீட்டுக் கடனுக்காக வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 0.5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் வரை கொடுக்கப்படும் கடன் தொகைக்கு (கடன் காலம் எவ்வளவாக இருப்பினும்) ப்ளோட்டிங் விகிதமாக 10.25% வசூலிக்கப்படுகிறது. அதற்கு அதிகமாக வாங்கப்படும் தொகைக்கு 10.50% சதவீதம் வட்டி வசூல் செய்யப்படுகிறது. குறைவான வட்டி மட்டுமல்லாமல் 25 லட்சம் வரை பெரும் கடன்களுக்கு செயல்பாடு கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது. அதற்கு மேலே வாங்கும் கடன் தொகைக்கு செயல்படுத்தும் கட்டணத்தை பாதியாக குறைத்துள்ளது. சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 1% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

IDBI வங்கி, வாகன கடன் மற்றும் வீட்டு கடனுக்கு 10.25% (அடிப்படை விகிதம்) சதவீத வட்டி வசூல் செய்கிறது. இந்த இரண்டு கடன்களுக்கும் செயல்படுத்தும் கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது. இந்த பயனை அக்டோபர் 9, 2013 முதல் அனுபவிக்கலாம். விஜயா வங்கியும் கூட விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள், வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான கடன்களுக்கு வருடத்திற்கு தலா 10.60%, 10.25%, 10.75% மற்றும் 12.50% சதவீதமாக வட்டி வசூல் செய்யப்படுகிறது. சில தனியார் வங்கிகளும் இவர்களை போல குறைந்த வட்டியில் இவ்வகை சலுகைகளை அறிவித்துள்ளது.

அதனால் குறைந்த வட்டி, குறையும் அடிப்படை புள்ளிகள் போன்ற விழாக்கால கடன் சலுகைகளால் உங்கள் பணத்தை கொஞ்சம் மிச்சம் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Festive Loan offers: How to make the most of it?

With every financial Institution gearing to make the most of the current festive season that is considered as auspicious by our Indian community to make different purchases, time is indeed right for consumers to make deals but with diligence.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X