நிதி நெருக்கடியில் தவிக்கும் ஏர் இந்தியா!!! வங்கியில் ரூ. 2,500 கோடி கடன் பெற திட்டம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் தனது நிதி தேவைக்காக ரூ.2,500 கோடி ரூபாய் கடன் பெறவுள்ளது, இது குறித்து அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக ஏர் இந்தியா நிறுவனம் காத்து கொண்டு இருக்கிறது என அதன் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 

அரசு நடத்தும் இந்த விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு போதிய நிதியை அரசாங்கத்தால் ஒதுக்க முடியாமல் போனதால், 8 முதல் 9 வங்கிகளிடம் கடன்பெற முனைந்துள்ளது என அவர் தெரிவித்தார். நியமன உத்திரவாதம் (சாவரீன் கியாரண்டி) என்பது கடன் கொடுப்பவர்களுக்கு காப்புறுதியாக செயல்படும். அதனால் ஒரு வேலை கடன் வாங்கியவர் கடனை செலுத்து முடியாத நிலைக்கு சென்றால், அரசாங்கமே அப்பணத்தை திருப்பிச் செலுத்தும்.

 
நிதி நெருக்கடியில் தவிக்கும் ஏர் இந்தியா!!! வங்கியில் ரூ. 2,500 கோடி கடன் பெற திட்டம்...

அரசாங்கத்தின் சமீபத்திய வரவு செலவு திட்ட ஆவணத்தின் படி, நடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பங்கு முதலீடாக ரூ 5,000 கோடி ஒதுக்கியுள்ளது.

அரசாங்கத்தின் பங்கு இந்நிறுவனத்திற்கு, அதன் கடன்களை செலுத்துவதற்கும், சம்பளங்களை வழங்குவதற்கும், குத்தகை வாடகை செலுத்துவதற்கும் மற்றும் அதன் புதிய போயிங் ட்ரீம்லைனர் விமானங்களின் ஒப்படைப்பு பணம் வழங்குதலுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அரசின் பணஉதவி பெற்றே தொடர்ந்து வருகின்றது. கடந்த 2007 முதல் இந்நிறுவனம் அரசு நடத்தும் இந்தியன் ஏர்லைன் உடனான இணைப்பின் சினெர்ஜிக்களை பெற தவறியதால் பெரும் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்துவருகின்றது. மேலும், உயர்ந்து வரும் எரிபொருள் விலை, வட்டி விலை, பெருகிவரும் போட்டிகள், மற்றும் அதன் சொந்த பிரச்சனைகளான பணவீக்க சம்பளங்கள், போயிங் & ஏர்பஸ் நிறுவனத்திடம் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் செய்து தருவதற்கான ஒப்புதல் போன்ற பெரும் சுமைகளை பெற்றது. இந்த எர்லைனின் நிதிசார்ந்த செயல்திறன் முன்னேற்றம் அடைந்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் இழப்புகள் கடந்த வருடம் 7,559.74 கோடி ரூபாயில் இருந்து குறைந்து இந்த வருடம் மார்ச் வரை 5,198.55 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த ஏர்லைன் இந்த ஆண்டு 14.05 மில்லியன் பயணிகளை சுமந்துள்ளது. இதனை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 13.40 மில்லியன் பயணிகளே பயணித்துள்ளனர். மேலும் இந்நிறுவனம் தனது மொத்த இழப்பை 23% அல்லது 3,989 கோடி ரூபாயாக குறைப்பதே இந்த ஆண்டின் இலக்கு என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India expects to get sovereign guarantees for Rs 2,500-crore loans

The state-run airline has tied up with 8-9 banks to raise the debt, to cover the shortfall in government funding to shore up its finances.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X