விவசாயிகளுக்கான புதிய வீட்டு கடன் திட்டம்!!: கனரா வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: பொது துறை வங்கியான கனரா வங்கி, விவசாயிகளுக்காக ஒரு புதிய வீட்டு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கனரா வங்கி இந்தியா முழுவதும் சுமார் 3,765 வங்கி கிளைகளை கொண்டும், பெங்களூரை தலைமையாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.

இவ்வங்கி ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் விவசாயிகளுக்கு இத்தகைய கடன் திட்டத்தை அளிக்கிறது. மேலும் பால் கொள்முதல், கோழிப்பண்ணை, தோட்ட வேலை போன்ற தொழில்செய்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என வங்கி தெரிவித்தது.

விவசாயிகளுக்கான புதிய வீட்டு கடன் திட்டம்!!: கனரா வங்கி

"வங்கி விவசாயிகளுக்கான புதிய கடன் திட்டத்தை உருவாக்கியுள்ளது, இத்திட்டத்தின் மூலம் சிறு விவசாயிகள் மிகவும் பயன்படுவர். மேலும் இத்திட்டம் அரசு கடன் திட்டங்களை பொருத்து அமைக்கப்பட்டுள்ளது." என கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. துபே தெரிவித்தார்.

விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த 30 ஆண்டுகள் வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது, கடனுக்கான வட்டி விகிதம் அவர்களது அறுவடை காலம் மற்றும் கடன் செலுத்தும் முறையை பொருத்து அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canara Bank launches new housing loan scheme for farmers

Bangalore headquartered, Public-sector lender, Canara Bank has launched new housing loan scheme targeted at agriculturists.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X