ரூ.1,337 கோடி மதிப்பு திட்டத்தை கைப்பற்றிய எல்& டி நிறுவனம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டிஎல்எஃப், 1,337 கோடி மதிப்புள்ள குர்கானில் அமையவுள்ள அதன் ஆடம்பர குடியிருப்பு திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை எல் & டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

 

டிஎல்எஃப் நிறுவனம் 765 குடியிருப்புகளை உள்ளடக்கிய உயர்ரக வீடுகளை கட்டும் திட்டத்தை "சிகரம்" (The Crest) என்ற பெயரில் குர்கானில் ஏற்கனவே கட்டத் தொடங்கி, அதில் 250 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

 

"டிஎல்எஃப் நிறுவனத்தின் ஆடம்பர குடியிருப்பு திட்டத்தை நடத்திமுடிக்க கட்டுமானத்துறையின் பெரும்நிறுவனமான எல் & டி நிறுவனத்தை நியமித்துள்ளது" என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இத்திட்டத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பீடு சுமார் ரூ.1,337 கோடி என மதிப்பிடப்படுகிறது. புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச கட்டுமான நிறுவனங்களினால் அதன் புதிய திட்டங்களை நிறைவேற்றப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.

ரூ.1,337 கோடி மதிப்பு திட்டத்தை கைப்பற்றிய எல்& டி நிறுவனம்!!!

டிஎல்எஃப் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அதன் கட்டுமானத் திட்டங்களை விரைந்து முடிக்கும் வண்ணம் வெளி நிறுவனங்களுக்கு கட்டுமான வேலைகளை அயலாக்க ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளது.

கட்டுமானம், உள்கட்டமைப்பு, வடிவமைப்பு, நிறைவுப்பணிகள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், குழாய்கள், வெளிச் சேவைகள், இயற்காட்சியமைப்பு, மற்றும் கேடய சின்னத்துடன் தொடர்புடைய அனைத்து துணை பணிகளும் இந்த கட்டுமான ஒப்பந்தத்தில் அடங்கும் .

டிஎல்எஃப் 2012-13 நிதி ஆண்டில் சுமார் ரூ.711.92 கோடி நிகர லாபம் சம்பாதித்துள்ளது. மேலும் அதன் மொத்த வருமானம் 7,772.84 கோடி. முன்னதாக, டிஎல்எஃப் நிறுவனம் திட்ட மேலாண்மை ஆலோசகராக MACE குழுவை நியமனம் செய்தது.

MACE நிறுவனம் கட்டுமான சேவை மற்றும் ஆலோசனை உட்பட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் உலகளாவிய நிறுவனமாகும். லண்டன் கண் (London Eye), ஹீத்ரோ டி5 விமான முனையம், 2012 லண்டன் ஒலிம்பிக் போன்ற புகழ்பெற்ற திட்டங்களில் MACE நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

"The Crest டிஎல்எஃப் குழுமத்தின் அடுத்த தலைமுறையின் ஆடம்பர குடியிருப்பு திட்டத்தின் சின்னமாக விளங்குக உள்ளது, எனவே இந்த திட்டத்தின் கட்டுமான வடிவமைப்புகள், கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் திட்ட மேலாண்மை நடைமுறைகள், மிக உயர்ந்த சர்வதேச தரத்திற்கு படி இணையாக உள்ளன " என டிஎல்எஃப் நிறுவனத்தின் திட்ட தலைவர் ரவி கச்ரு கூறினார்.

திட்ட தளத்தில், தொழிலாளர் மையம், விபத்துச் சேவையூர்தி, மருத்துவர் வசதி, குடிநீர் மற்றும் ஒட்டுமொத்த இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் போன்றவை நிறுவனத்தால் வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DLF awards 1337 crore contract to L&T

India's largest realty firm DLF said on Monday that it has given a Rs. 1,337 crore contract to L&T for construction of its luxury residential project in Gurgaon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X