பங்குச் சந்தையில் ஃபிளாஷ் விபத்து!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில நேரங்களில் மனித அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக, நிறுவனத்தின் சாதாரணப் பங்கு அல்லது முன்பேர ஒப்பந்தம் அதன் உண்மையான சந்தை விலைக்கு வெகு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ விற்கவோ அல்லது வாங்கப்படலாம். இவ்வாறான பிழை தரகர் மூலமாகவோ அல்லது பங்கு சந்தையின் இயங்குதளத்தில் ஏற்படலாம். இத்தகைய சதி அல்லது தவறின் விளைவாக கணிசமான புள்ளிகள் திடீரென குறைந்து பங்கு குறியீட்டு இயக்கத்தை வழிநடத்த வல்லமை படைத்தவை.

தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனித தவறின் விளைவாக ஒரே நேரத்தில் தவறான விலையில் தீடிரென நடக்கும் பங்கு வர்த்தகம் பங்குச் சந்தை மொழியில் ஃபிளாஷ் விபத்து என அறியப்படுகிறது. இது போன்ற பல ஃபிளாஷ் விபத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ளன.

இதன் விளைவு

இதன் விளைவு

இத்தகைய விபத்தின் முலம் பங்கு சந்தையில், பங்கின் விலை, அதன் எண்ணிக்கை மாறலாம். இது போன்ற விபத்துக்களை கட்டுப்படுத்த செபி சில விதிமுறைகளை கொண்டுவந்தது. மேலும் தேசிய பங்கு சந்தை வாரியம் பெரும் விபத்துகள் ஏற்படும் வேளையில் ஆபத்துகளை தவிர்க்கும் வண்ணம் உடனடியாக செயலில் இறங்கவும் வாய்ப்புகள் உள்ளன.

20 மைக்ரோ விணாடிகளில் ஷட் டவுன்

20 மைக்ரோ விணாடிகளில் ஷட் டவுன்

இந்த விபத்துக்களின் மூலம் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுக்க, தேசியப் பங்குச்சந்தை அமைப்பு, 20 மைக்ரோ செகண்ட்ஸ் ( 1 வினாடி = 1,000 கணப்பொழுது மற்றும் 1 கணப்பொழுது = 1000 மைக்ரோ செகண்ட்ஸ்) நேரத்திற்குள் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது என மும்பை பங்கு சந்தையின் ஒரு முக்கிய அறிக்கை தெரிவிக்கிறது. எனினும் இது போன்றதொரு நடவடிக்கை எப்போது செயல்படுத்தப்படும் எனத் தெரியவில்லை.

அக்டோபர் 5, 2012

அக்டோபர் 5, 2012

இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வு கடைசியாக அக்டோபர் 2012 ஆண்டு ஐந்தாம் தேதி நடந்தது. விபத்து ஏற்பட்டவுடன் பங்கு வர்த்தகத்தை நிறுத்த இயலாமல் போனதின் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் காலவரையற்ற அழிவு ஏற்பட்டது.

விழ்ச்சி

விழ்ச்சி

10 %, 15 % மற்றும் 20 % ஏற்ற இறக்கம் ஏற்படும் போது, இந்தியாவில் உள்ள பங்கு சந்தைகள் சர்க்யூட் பிரேக்கர்ஸ் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன. மேலும் வர்த்தக நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலவரம்பு வரை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

முயற்சிகள் தோல்வி

முயற்சிகள் தோல்வி

ஆனால், அந்த குறிப்பிட்ட நாளில் (அக்டோபர் 5 2012), முழுமையான அளவில் பங்கு வர்த்தகத்தை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தமையால் ஏற்கனவே 50 புள்ளிகள் குறைந்திருந்த நிப்டி குறியீட்டெண் மேலும் வீழ்ச்சி அடைந்தது.

விணாடிக்கு 0.2 மில்லியன் பங்குகள் வர்த்தகம்

விணாடிக்கு 0.2 மில்லியன் பங்குகள் வர்த்தகம்

மேலும் ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட 0.2 மில்லியன் பங்கு வர்த்தக ஆணைகள் (Orders) தேசியப் பங்குச்சந்தையில் செயல்படுத்தப்படுகின்றன என அறியப்பட்டன.

6 வினாடிகள் தேவை

6 வினாடிகள் தேவை

6 வினாடி கால இடைவெளிக்கு பின்னரே பங்கு வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்படமுடியும் என்பது மட்டுமே யதார்த்தத்தில் நினைத்துப் பார்க்க முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flash crash in stock markets: All you need to know?

Sometimes due to human or technical error in the system, stock of a company or a derivatives contract is traded i.e. bought or sold at a price way above or below the actual market price.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X