3 மாத சம்பளம் வழங்க தவறிய லான்கோ இன்போடெக்!!! பணியாளர்களின் நிலை???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடனில் மூழ்கி இருக்கும் உள்கட்டமைப்பு நிறுவனமான லான்கோ இன்போடெக், அமைப்பு கடன் மறுகட்டமைப்பு கருத்துரு முன்னேற்றத்தால், அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்களுக்கு கடந்த 3-4 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

குர்கானை மையமாகக் கொண்ட இந்நிறுவனம் கடந்த வருடம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 2000 மாக குறைத்துள்ளது. என்னெனில், இந்நிறுவனம் சில பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது மேலும் வேறு சிலர் தானாகவே வெளியேறி வேறுசில நிறுவனங்களான அரசு நடத்தும் பவர் பினான்ஸ் கார்ப் மற்றும் ரூரல் எலெக்டிரிபிகெஷன் கார்ப் போன்ற நிறுவனங்களில் சேர்ந்தார்கள்.

நிறுவன பணியாளர்களின் இடர்மிகுந்த திட்டங்களால் சம்பளம் சரியான நேரத்திற்கு வழங்கப்படவில்லை என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார். மேலும் இதன் முன்னாள் பணியாளர்கள் மீண்டும் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். கடந்த 2009 ஆம் வருடம் இந்நிறுவனம் ஹைதராபாத்தில் இருந்து குர்கோனுக்கு இடம்பெயர்ந்தது.

3 மாத சம்பளம் வழங்க தவறிய லான்கோ இன்போடெக்!!! பணியாளர்களின் நிலை???

இந்த நிறுவனம் அரசு அமைப்பு கடன் மறுகட்டமைப்பு துறையிடம் தனது கடன்களை திருத்தியமைக்க கோரி அணுகியுள்ளது. "இந்த கருத்துரு நடவடிக்கை நடந்து கொண்டிருப்பதாகவும் மேலும் லான்கோ இன்போடெக்கிடம் அதன் துணை நிறுவங்கள் பற்றிய மேலும் விவரங்கள் கொடுக்கும்படி கேட்டிருந்தது." என பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்தார்.

இந்த குழுவின் ஒட்டுமொத்த கடன் சுமார் 35,000 கோடி ரூபாயாகும். பாரெக்ஸ் இழப்புகள் மற்றும் நிலையத்தின் மோசமான இயக்குதல் திறனாலும் இந்த நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் இழப்பு 579 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

3 மாத சம்பளம் வழங்க தவறிய லான்கோ இன்போடெக்!!! பணியாளர்களின் நிலை???

"கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதியின் விலைகள் இரட்டிப்பானதால், கர்நாடகாவில் உள்ள இந்நிறுவனத்தின் உடுப்பி செயல்திட்டம் இழப்புகளை சந்தித்தது. இதன் அன்பாரா-C திட்டம் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்தது. மேலும், உத்தர பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா அரசுகளிடம் இருந்து வரவேண்டிய நிலுவை தொகை 2,800 கோடியாக உயர்ந்து இருந்தது." என ஷா தெரிவித்தார்.

எனவே இந்நிறுவனத்தின் ஊழியர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது!!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lanco Infratech employees not paid for 3-4 months

Debt-ridden infrastructure firm Lanco Infratech has not paid salaries to about 1,000 of its employees for the past three-four months while proceeding with its 7,500-crore corporate debt restructuring proposal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X