ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு 11.1 பில்லியன் டாலராக உயர்வு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: சமுக வலைதளமான ட்விட்டர், பங்கு சந்தையில் இறங்க கடந்த ஒரு மாத காலமாக இதற்கான செயல்பாடுகளை செய்து வந்தது. இதற்கான ஒப்புதல் பெற்ற இந்நிறுவனம் கடந்த வியாழன்று ட்விட்டர் நிறுவனம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பங்கு வெளியீட்டு திட்டத்திற்காக அதன் பங்கின் விலை 17 முதல் 20 டாலர்கள் வரை இருக்கும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் மதிப்பு 11.1 பில்லியன் டாலர்களாக உயரும்.

 

பாதுகாப்பு மற்றும் பரிமாற்றம் ஆணையிடம் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வமான தகவல் அறிக்கையின் படி, பங்கு வெளியீட்டில் இருந்து ஒரு வருடத்திற்குள் 1 பில்லியன் டாலரில் இருந்து 1.6 பில்லியன் டாலர் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தது.

 
ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு 11.1 பில்லியன் டாலராக உயர்வு!!

ட்விட்டர் நிறுவனம் ஒரு பங்கிற்கு 17 முதல் 20 டாலர் வரை 70 மில்லியன் பங்குகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த பங்கு வெளியீடு நன்றாக செயல்பட்டால் மேலும் 10.5 மில்லியன் பங்குகளை ஒதுக்கீடு செய்யும் எனத் தெரிவித்தது.

இந்த தகவல் அறிக்கையின் படி இந்த நிறுவனத்தின் அதிக பங்குதாரரான முதலீட்டு நிறுவனம் ரிஸ்வி டிராவர்ஸ் டிவீட்டர் பங்கில் 17.9% வைத்திருக்கிறார். அவரை தொடர்ந்து இவான் வில்லியம்சின் துணை நிறுவனர் 12 % வைத்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter seeks up to $1.61 billion in IPO

Twitter announced an expected share price on Thursday of between 17 and 20 dollars for its eagerly-awaited initial public offering, which will see the microblogging company valued as high as 11.1 billion dollars.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X