மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓ ரெடி!! ஆனா பில் கேட்ஸ் தான் பாவம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சீஃப் எக்சிகியூட்டிவ் ஸ்டீவ் பால்மரின் ஓய்வை அடுத்து காலியாகும் சி.இ.ஓ பதவிக்கு 5 பெயர்களை கொண்ட பட்டியலை அந்நிறுவனம் இறுதிப்படுத்தியுள்ளது. அதேவேலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேர்மேன் பதவியில் இருந்து பில் கேட்ஸ் விலக நிறுவனத்தின் பங்குதாரர்கள் வலியுறுத்திகின்றனர்.

இந்த பட்டியலில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சீஃப் ஆலன் முலாலி மற்றும் முன்னாள் நோக்கியா சி.இ.ஓ ஸ்டீஃபன் இலாப் ஆகிய இருவரின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக சி.இ.ஓ வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த சி.இ.ஓ பொறுப்புக்கு மூன்று அந்நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ்களின் பெயர்களையும் பட்டியலில் வைத்திருக்கிறது. இவர்களில் ஸ்கைப் (SKYPE) சி.இ.ஓ டோனி பேட்ஸ் (இவர் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி துறைக்கு பொறுப்பேற்றுள்ளார்) மற்றும் சத்யா நடெல்லா (இவர் கிளவ்ட் மற்றும் என்டர்பிரைஸ் துறையின் முத்த அதிகாரி ஆவார்) ஆகியோர் பெயரும் அடக்கம்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெயர்கள் மட்டுமல்லாமல் இன்னும் 40 எக்சிகியூட்டிவ்களையும் இந்த பதவிக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பரிசீலிக்க உள்ளதாகவும் தெரிகிறது. மேலும், இந்த தேர்வு நடைமுறை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போதைய சி.இ.ஓ பால்மர், சென்ற ஆகஸ்ட் மாதத்தின்போது "நான் இன்னும் 12 மாதங்களில் பதவியில் இருந்து ஓய்வு பெறுவேன்" என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

40 எக்சிகியூட்டிவ்கள்

40 எக்சிகியூட்டிவ்கள்

இதர 40 எக்சிகியூட்டிவ்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேர்வுக்குழுவினர் பல்வேறு வகையான வேறுபட்ட துறைகளில் சிறப்புடன் இயங்கிவரும் எக்சிகியூட்டிவ்களுடன் பேசி வருவதாக தெரிகிறது. லைஃப் சைன்ஸ் தொடங்கி கன்ஸ்யூமர் துறை வரை வேறுபட்ட துறைகளில் அனுபவம் மிக்க சீஃப் எக்சிகியூட்டிவ்களை இந்த தேர்வுக்குழு பரிசிலீத்து வருகிறது.

பட்டியலை வெளியிட மறுப்பு

பட்டியலை வெளியிட மறுப்பு

தனது நிறுவனத்திலிருந்தே பரிசீலிக்கப்படும் எக்சிகியூட்டிவ்களின் பெயர்கள் குறித்த தகவலை வெளியிட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது. நோக்கியா தரப்பு பிரதிநிதிகளிடமிருந்தும் இதுபற்றிய தகவல் ஏதும் கசியவில்லை.

ஃபோர்டு நிறுவனம்

ஃபோர்டு நிறுவனம்

இருப்பினும் இறுதிப்பட்டியலில் ஆலனின் பெயர் (ஃபோர்டு நிறுவனத்தின் தற்போதைய சீஃப்) இடம் பெற்றிருப்பது பற்றி ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகப்பிரதிநிதி கூறும்போது - "நாங்கள் கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததில் எந்த மாற்றமும் இல்லை. ஆலன் தற்போது ‘ஒன் ஃபோர்டு' திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளார். கருத்து ஊகங்களில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

ஆலன் முலல்லி, மைக் லாரி!!

ஆலன் முலல்லி, மைக் லாரி!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களாகவே அசாதாரண திறன் மிக்க சி.இ.ஓ ஒருவரை ஸ்டீவ் பால்மருக்கு அடுத்தபடியாக நியமிக்கவேண்டும் என்று தீவிரமாக நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். ஆலன் முலல்லி அல்லது மைக் லாரி ( இவர் தற்போது கம்ப்யூட்டர் சைன்சஸ் கார்ப் நிறுவனத்தின் சி.இ.ஓ) போன்ற திறமைசாலிகளை அவர்கள் விரும்புகின்றனர்.

பில் கேட்ஸூக்கு ஆப்பு!!

பில் கேட்ஸூக்கு ஆப்பு!!

அதுமட்டுமல்லாமல் சில முதலீட்டாளர்கள் தற்போது சேர்மனாக பதவி வகிக்கும் பில் கேட்ஸ் (மைக்ரோசாஃப்ட் உப நிறுவனர்) விலகிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் அதிரடியாக கூறிவருகின்றனர்.

முன்னேற்றத்திற்கு தடை

முன்னேற்றத்திற்கு தடை

அதாவது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தேவையான புரட்சிகர மாற்றங்களை செயல்படுத்துவதற்கு பில் கேட்ஸ் தடையாக உள்ளார் என்பது அவர்கள் கருத்து.

பங்கு சந்தையில்ல கலக்கல்

பங்கு சந்தையில்ல கலக்கல்

மிக அதிகபட்சமான லாபத்தை ஈட்டி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த மாதத்தில் வால் ஸ்டீர்ட் பங்கு வர்த்தகத்தின் அதிகபட்ச காலாண்டு லாபம் மற்றும் வருவாய் குறித்த ஊக அறிக்கைகளையும் தாண்டிச்சென்ற புள்ளியை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்தங்கியுள்ள துறைகள்

பின்தங்கியுள்ள துறைகள்

இருப்பினும் மொபைல் கம்ப்யூட்டிங் வணிகத்தில் ஆப்பிள் இன்க். மற்றும் கூகுள் இன்க். போன்ற நிறுவனங்களிடம் இது இன்னும் போட்டி போட முடியவில்லை.

ஸ்டீவ் பால்மரின் ஈடுபாடு!!!

ஸ்டீவ் பால்மரின் ஈடுபாடு!!!

தற்போதைய சி.இ.ஓ ஸ்டீவ் பால்மர் விசேஷமான சாதனங்களின் தயாரிப்பில் தனது கவனத்தை செலுத்துகிறார். சர்ஃபேஸ் டேப்லட் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோல் ஆகியவற்றோடு இண்டர்நெட் மூலமாக வழங்கப்படும் மென்பொருள் சேவைகள் போன்ற திட்டங்களுக்கும் அவர் முக்கியத்துவம் அளித்துவருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft narrows CEO shortlist; Alan Mulally,Stephen Elop make the cut

Microsoft Corp has narrowed its list of external candidates to replace Chief Executive Steve Ballmer to about five people, including Ford Motor Co chief Alan Mulally and former Nokia CEO Stephen Elop
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X