தள்ளாடும் சரக்கு நிறுவனம்!!! யுனைடெட் ப்ரூவரீஸ் 2ஆம் காலாண்டு முடிவுகள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: யுனைடெட் ப்ரூவரீஸ், விற்பனைக் குறைவினாலும் அதிக விளம்பர செலவுகளினாலும் செப்டம்பர் 30, 2013 உடன் முடிவடைந்த காலாண்டில் (Q2) ரூ. 18.57 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. பங்கு சந்தையில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட உத்தேசமான 5 சதவிதம் வீழ்ச்சியினையடுத்து இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.744 ஆக உள்ளது. கிங்ஃபிஷர் பியர் தயாரிக்கும் இந்நிறுவனம் ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.34.20 கோடி இலாபத்தை ஈட்டியது குறிப்பிடதக்கது.

தள்ளாடும் சரக்கு நிறுவனம்!!! யுனைடெட் ப்ரூவரீஸ் 2ஆம் காலாண்டு முடிவுகள்..

நிறுவனத்தின் விரிவாக்கம், அதிகப்படியான மழை, விலைவாசி உயர்வு மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான சந்தை இழப்பினாலும் இந்தக் குழுமத்தின் செயல்பாடுகளின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 1.5 சதவிதம் குறைந்து வருகிறது, தற்போது இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 845 கோடியாக உள்ளது.

முதல் அரையாண்டில், உயர்-இறுதி நுகர்வோர் விலைகளினாலும், டாஸ்மாக்கின் சாதகமற்ற கொள்முதல் முறையினாலும் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை மதிப்பில் 20% இழப்பு ஏற்பட்டதாக யுனைடெட் ப்ரூவரீஸ் தெரிவித்தது.

கடந்த ஒர் ஆண்டில் மும்பை பங்கு சந்தையில் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.785ல் தொடங்கி ரூ.742 என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சுமார் 5,85,439 ஒருங்கிணைந்த பங்குகள் பிஎஸ்ஈ யிலும் என்எஸ்ஈயிலும் விற்பனையில் கைமாறி உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

United Breweries extends fall on weak Q2 results

United Breweries has dipped 5% to Rs 744, extending its Friday's nearly 5% fall, after reporting a loss of Rs 18.57 crore for the Q2
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X