தங்கம் வாங்குவதில் நம்பர்.1 இடத்தை இழக்கிறது இந்தியா! முந்தும் சீனா!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: தங்க இறக்குமதியின் மீது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான புதிய விதிமுறைகளினால் இந்தியாவில் தங்க இறக்குமதி குறைந்து உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் என்ற தகுதியை இந்தியா இழக்கிறது, இதனால் அந்த பொருமைக்குரிய முதல் இடத்தை சீனா பிடிக்கப் போகிறது என்று உலக தங்க கவுன்சிலின் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

 

2013-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் உத்தேச தங்கக் கொள்முதல் அளவு 1,000 டன்னிலிருந்து 900 டன்னாகக் குறைந்துள்ளது அதே நேரத்தில் சீனாவின் உத்தேச கொள்முதல் மதிப்பு 1,000 டன்னாக நிலைத்திருக்கிறது.

 

அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதார சிக்கன நடவடிக்கைகளால் 24% சரிவடைந்த தங்கத்தின் விலை, இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைவதால் உலக அளவில் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது.

தங்கம் வாங்குவதில் நம்பர்.1 இடத்தை இழக்கிறது இந்தியா! முந்தும் சீனா!

"தங்கச் சந்தையின் மீது இந்திய அரசு செய்துள்ள நிர்வாகச் சீர்திருத்தங்கள் நல்ல முறையில் செயல்பட்டு தங்க இறக்குமதியைக் குறைத்துள்ளது" என்று உலக தங்க கவுன்சிலின் கிழக்குப் பிரிவு நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் ஷெங் தெரிவித்தார். சென்ற ஆண்டு கொள்முதலான 864 டன்னை எட்டிப் பிடிப்பதற்கே 'டண்டணக்கா' போடும் நிலையில் 1000 டன்னை எல்லாம் எட்டிப் பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார். சீர்திருத்தங்களை மட்டும் அறிமுகப்படுத்தி இருக்காவிட்டால் சீனாவுக்கு இணையாக இந்தியாவும் கொள்முதல் செய்திருக்கும்.

உலக தங்க கவுன்சிலின் மூன்றாவது காலாண்டு அறிக்கையின் படி, சீனா 779.6 டன் தங்கத்தை இறக்குமதி செய்து இந்தியாவின் 714.7 டன்னை முறியடித்துள்ளது. மூன்று காலாண்டுகளில் சீனாவின் கொள்முதல் 2012-இல் அதன் மொத்தத் தங்க கொள்முதலை விட அதிகம்.

தங்கம் வாங்குவதில் நம்பர்.1 இடத்தை இழக்கிறது இந்தியா! முந்தும் சீனா!

அதிகமான வர்த்தகப் பற்றாக்குறையின் நெருக்கடியினாலும், படுத்த படுக்கையாய் இருக்கிற ரூபாய் மதிப்பினாலும், இந்தியாவின் இறக்குமதியில் பெட்ரோலியத்துக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கும் இந்த மஞ்சள் பிசாசின் தேவையைக் குறைக்க அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தங்க இறக்குமதியின் மீது அரசு 10% பதிவு வரிகளை விதித்ததன் மூலம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியை விட அதிகமாக இருந்த இறக்குமதியை இழுத்துப் பிடித்து சரிசமமாக்கி உள்ளது. இதனால் உள்நாட்டுச் சந்தையில் தங்கம் விற்கும் வியாபாரிகள் கொள்முதல் செலவு அதிகமாகிவிட்டதாக மூக்கால் அழுகின்றனர். மே மாதத்தில் 162 டன் தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா, அக்டோபரில் இறக்குமதி செய்த தங்கம் எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள், வெறும் 24 டன்கள் மட்டுமே!

அதிகாரப்பூர்வமான கணக்குதான் இவ்வளவு என்றால், கள்ளக் கடத்தல் போன்ற அதிகாரப்பூர்வமற்ற வழிகளிலும் இந்தியாவுக்குத் தங்கம் வருகிறது என்று உலக தங்க கவுன்சில் எச்சரித்து உள்ளது. சரி, அது மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கும் என்ற கேள்விக்கு, 'அதுக்கும் நம்ம கிட்ட கணக்கு இருக்கு' என்று பதிலளிக்கப் பட்டுள்ளது.

செத்தான்ட சேகறு!! காப்புரிமை வழக்கில் சிக்கி தவிக்கும் சாம்சங்..செத்தான்ட சேகறு!! காப்புரிமை வழக்கில் சிக்கி தவிக்கும் சாம்சங்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to lose No. 1 gold consumer tag

China is this year set to replace India as the world's biggest gold consumer by a convincing margin as strict import rules introduced by New Delhi bite, forecasts from the World Gold Council.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X