வியபாரத்தை பெருக்க பல கோடிகளில் முதலீட்டில் உருவாக்கப்பட்ட விளம்பரங்கள்!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: விளம்பரத்தின் வலிமையை உணர்ந்த இன்றைய வணிகமயமான உலகம், மக்களை தான் காட்டும் திசையில் பயணிக்க செய்கிறது பன்னாட்டு நிறுவனங்கள். இதனால் பெரு நிறுவனங்கள் தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு, தயாரிப்புகளை விளம்பரம் செய்வதில் அதிகபடியான பணத்தை செலவு செய்கிறது.

ஊடகங்களில் இந்த விளம்பரங்கின் வர்த்தகம் கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விளம்பரங்கள் பல வகையில் உள்ளது. மக்களிடம் விரைவாகவும், அலுத்தமாகவும் சென்றடைவது வீடியோ விளம்பரங்கள் தான், நாம் டிவியில் பொதுவாக பார்ப்பது தான்.

எந்த பொருளாக இருந்தாலும் சரி அதை சரியான முறையில் விளம்பரம் செய்தால் மக்களிடையே அதன்விற்பனை அதிகரிக்கும் என்பது இக்காலத்து வர்த்தக நிதி. எனினும் இத்தகைய விளம்பரத்திற்கு மில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுவது இயல்புதான். ஆனால் இத்தகைய விளம்பரங்களின் தாக்கம் தான் அதிகம். சரி அத்தகைய விளம்பரங்களை செய்த நிறுவனங்களையும், சில சுவாரஸ்யமான தகவல்களையும் இப்பொழுது பார்ப்போம்.

சேனல் 5

சேனல் 5

பாரீஸ் நாட்டை சேர்ந்த வாசனை திரவியம் நிறுவனமான சேனல் 5 அனைவரும் வாயை பிளக்கும் வகையில் விளம்பரத்திற்காக சுமார் 33 மில்லியன் டாலரை செலவு செய்துள்ளது.

ஜார்ஜ் w.புஷ்

ஜார்ஜ் w.புஷ்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் w.புஷ் தனது 2004 ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 9/11 அன்று நடந்த சம்பவத்தை மையமாக வைத்து ஒரு விளம்பரம் தயரிக்கப்பட்டது. இதன் மதிப்பு 14.2 மில்லியன் டாலாரகும். வெற்றி கனியை பறித்தவரும் அவர் தான்.

கின்னஸ் பீர்

கின்னஸ் பீர்

அயர்லாந்த நாட்டின் டப்ளின் நகரை தலைமை இடமாக கொண்டு, உலக நாடுகள் முழுவதும் மதுபானம் விற்பனை செய்து வரும் கின்னஸ் பீர் நிறுவனம் 1 நிமிடம் 34 நொடிகள் மட்டுமே ஒடக்கூடிய ஒரு விடியோ விளம்பரத்திற்காக 13.4 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

அவிவா லைப் இன்சூரன்ஸ்

அவிவா லைப் இன்சூரன்ஸ்

இந்நிறுவனத்தின் முந்தைய பெயர் நார்விச் யூனியன் கடந்த 2008ஆம் ஆண்டு சுமார் 13.4 மில்லியன் டாலர் செலவில் ஒரு விளம்பரத்தை தயாரித்தது. இதில் ஹாலிவுட் நச்சத்திரங்கள் பலர் இடம்பெற்றனர். இந்சத விளம்பரத்தின் மையக்கருத்து என்வென்றால் பெயரை மாற்றிய பிறகு இந்த திரையுலக நச்சத்திரங்கள் (பெயர் மாற்றம் செய்து கொண்ட நச்சத்திரங்கள்) உயர்ந்த இடத்தை அடைந்தனர், அதேபோல் அவிவா லைப் இன்சூரன்ஸ் நிறுவனமும் அடைவோம் என்பது தான்.

கார்ல்டன் டிராட் பீர்

கார்ல்டன் டிராட் பீர்

மேலும் இன்னும் ஒரு மதுபான நிறுவனம், இந்நிறுவனம் சுமார் 300 திரைப்பட நிச்சத்திரங்களை கொண்டு 9 மில்லியன் டாலர் செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் தனது மதுபான தயரிப்பை விளம்பரம் செய்தது.

கிறைஸ்லர்

கிறைஸ்லர்

ஆட்டோமொபைல் உலகில் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான கிறைஸ்லர் நிறுவனம் தனது புதிய மாடல் காரை 9 மில்லியன் டாலர் செலவில் இசை துறையில் புகழ்பெற்ற ராப் கலைஞர் எமினெமை கொண்டு படமாக்கப்பட்டது.

பெப்ஸி

பெப்ஸி

நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பெப்ஸி குளிர்பான நிறுவனம் கடந்த 2002ஆம் ஆண்டு பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸை கொண்டு மிகவும் அற்புதமான ஒரு விளம்பரத்தை 7.53 மில்லியன் டாலர் செலவில் எடுத்தது.

ஹோண்டா

ஹோண்டா

நாம் அனைவரும் மிகவும் பிடித்தமான ஹோண்டா கார் நிறுவனம் 2009 ஆண்டு 90 விணாடிகள் ஒடக்கூடிய ஒரு விளம்பர படத்தை தயரித்தது. அதன் மதிப்பு 6.5 மில்லியன் டாலராகும்.

அடிடாஸ்

அடிடாஸ்

இன்றைய இளைய தலைமுறையினரிடம் அடிடாஸ் தயாரிப்புகள் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அடிடாஸ் நிறுவனம் "ஆல் இன்" என்ற தலைப்பில் பல துறைகளை சேர்ந்த பல விளையாட்டு நச்சத்திரங்கள் கலந்து கொண்ட ஒரு விளம்பரம் எடுக்கப்பட்டது. இதன் மதிப்பை அந்நிறுவனம் வெளியிட மறுத்தது.

மான்ஸ்டர்.காம்

மான்ஸ்டர்.காம்

பட்ட படிப்பு முடித்த மாணவர்களுக்கு தெய்வமாக விளங்குகிறது இந்த இணையதளம். இந்த நிறுவனத்தின் முதல் வளம்பரமே மிக அதிரடியாக தயாரிக்கப்பட்டது. அதன் மிதிப்பும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

List of Top 10 Most Expensive Commercial Ads

Advertising is the most powerful tool in the mass media. Many big companies have realized its significance and have considered it as the most important aspect.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X