மகளிர் குழுக்களுக்கு 7 சதவிதத்தில் கடன்கள் வழங்க வேண்டும்!!: ஆர்பிஐ அறிவிப்பு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ஆண்டிற்கு 7 சதவீதம் என்ற விகிதத்தில் கடன் வழங்கும்படி பொதுத் துறை வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஸ்கர் யோஜனா ஆஜீவிகா (எஸ்ஜிஎஸ்ஒய்) திட்டத்தின் கீழ் வட்டி மானிய நலத்திட்டத்தின் பயன்களை அவர்கள் நேரடியாக வங்கிளின் மூலம் பெறலாம் என்பதே இந்த அறிவுறுத்தலுக்குக் காரணமாகும்.

மகளிர் குழுக்களுக்கு 7 சதவிதத்தில் கடன்கள் வழங்க வேண்டும்!!: ஆர்பிஐ அறிவிப்பு..

"2014ஆம் ஆண்டின் போது, பிஎஸ்பிக்கள், விதிக்கப்பட்ட சராசரி வட்டி மற்றும் அதிகபட்ச வரம்பாக 7 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மானியம், 150 மாவட்டங்களில் இயங்கும் எஸ்ஹெச்ஜிக்களுக்கு (சுய உதவி குழுக்கள்) 7 சதவீதத்தில் கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனைத்து பிஎஸ்பிக்களுக்கும் வழங்குகிறது" என்று ஆர்பிஐ ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் எஸ்ஜிஎஸ்ஒய் திட்டம், ஏழைப் பெண்களுக்கென வலுவான அமைப்புகளை நிறுவி, அதன் மூலம் வறுமையான குறைப்பதற்கென்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் மகளிர் எஸ்ஹெச்ஜிக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 3 லட்சம் வரையிலான கடன்களுக்கு, வங்கிகள் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தை விதிக்க வேண்டும். எனினும், 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கும், நவம்பர் 30 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நீட்டிக்கப்பட்ட கடன்களுக்காக, தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து எஸ்ஹெஸ்ஜிக்களின் கடன் அக்கவுன்ட்களுக்கான வட்டி விகிதத்தை 2013 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து 7 சதவீதமாக மாற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI directs PSU Banks to give loans to women groups at 7%

The Reserve Bank of India has asked public sector banks to provide credit to women self help groups at a rate of 7 per cent per annum.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X