தங்க ஆபரண ஏற்றுமதியில் 50% சரிவு!!.. கடத்தல் அதிகரிப்பு...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க ஆபரண ஏற்றுமதியில் 50% சரிவு!!.. கடத்தல் அதிகரிப்பு...
மும்பை: தங்க ஆபரணத்தின் வேலைபாடுகளில் உலகளவில் சிறந்து விளங்குவது இந்தியா தான். இதனால் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு தங்க ஆபரண ஏற்றுமதி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது. ஆனால் நடப்பு ஆண்டு ஏற்றுமதிக்கு சதகமாக இல்லை என்றே சொல்லலாம். நடப்பாண்டில் இந்தியாவின் தங்க ஆபரண ஏற்றுமதி 50 சதவிகிதம் வரை சரியலாம் என கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மிதுல் சொக்சி தெரிவித்ததாக பிடிஐ செய்திகள் கூறுகின்றன.

ஆபரண ஏற்றுமதி ஊக்கக்குழுவின் விவரங்கள் படி ஏற்றுமதி 2013-13 ஆம் ஆண்டில் 1,293 கோடி ரூபாயாக இருந்தது.

உள்நாட்டுச் சந்தையில் குறைந்த அளவே தங்க இருப்பு உள்ள நிலையில், மதிப்புக்கூட்டு வரி 8 முதல் 10 சதவிகிதமாக உள்ளது. இதனால் இறக்குமதி பெருமளவில் குறைந்தது, மேலும் ஏற்றுமதி செய்ய சந்தையில் சிறிய அளவு தங்கம் மட்டுமே உள்ளதால், இந்நிலை கடத்தலுக்கு வழிவகுத்துள்ளது என சொக்சி தெரிவித்தார்.

மும்பையில் UBM இந்தியா மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஆபரண கண்காட்சியில் (Jewellery & Gems Fair 2013) பேசுகையில், ஏற்றுமதி கடந்த 7 மாதங்களில் 55 சதவிகிதம் வரை குறைந்துள்ளது எனவும் நடப்பாண்டில் மொத்தம் 50 சதவிகிதம் வரை ஏற்றுமதி குறையும் என எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold jewellery exports may decline by 50% in FY14

Gold jewellery exports may decline by about 50 per cent in this financial year from last year after government restrictions reduced the availability of raw material.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X