வெளிநாட்டு கடன் பத்திரங்களின் மூலம் ரூ.750 கோடி முதலீடு!!! ஐசிஐசிஐ வங்கி...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் முதன்மை தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி துபாயிலுள்ள தன் கிளை வங்கி மூலம் Reg-S வகையை சேர்ந்த (அமெரிக்கர் அல்லாதோர் செய்யும் முதலீடு) 5.5 வருட கால பத்திரங்களை 4.8 சதவிகித மதிப்பில் விற்று சுமார் 75 கோடி டாலர்களை திரட்டியதாகத் தெரிவித்துள்ளது. இவை 99.609 டாலர் என்ற மதிப்பில் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது 500 கோடி டாலர் அளவிலான நடுத்தர கால நிதி திரட்டும் திட்டத்தின் (MTN) ஒரு பகுதி என்றும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடன் பத்திரங்களின் மூலம் ரூ.750 கோடி முதலீடு!!! ஐசிஐசிஐ வங்கி...

Reg-S வகையை சேர்ந்த இந்த பத்திர வெளியீடு, மே 24ஆம் தேதி அமெரிக்க அரசின் சிக்கன அறிவிப்புகளுக்குப் பிறகு, மேற்கத்திய சந்தைகளில் வட்டி வீதங்கள் உயர்ந்திருந்தது, இந்நிலையில் 4.5 மடங்கு மதிப்பு, அதாவது 350 கோடி டாலர்களை ஈர்க்குமளவிற்கு இப்பத்திர வெளியீடு இருந்ததாக வர்த்தக வங்கிகள் தெரிவித்தன.

இந்த வெளியீடு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்களின் பெரும் பங்களிப்புகளில் ஒன்றாக அதாவது 66 சதவிகிதம் இருந்தது என்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, தரமான இந்திய முதலீடுகளின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சாதனை எனவும் ஒரு ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது.

இந்த வெளியீட்டை நிர்வகிக்க ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா, மெரில் லின்ச், சிட்டி பேங்க், டாய்ச்ச பேங்க் மற்றும் HSBC போன்ற நிறுவங்கள் முன்னிறுத்தப்பட்டிருந்தன. பதிவு விதிமுறைகள் முடியும் வரை எந்த வங்கியும் சந்தைகளில் விலையை கூற முன்வரவில்லை.

இந்த வெளியீடு 58 சதவிகிதம் நிதி மேலாளர்களையும், 16 சதவிகிதம் வங்கிகளையும், காப்பீடு மற்றும் ஓய்வுதிய நிதிகள் 7 சதவிகிதமும், தனியார் வங்கிகள் 11 சதவிகிதமும் 8 சதவிகிதம் பிற நிறுவங்களையும் உள்ளடக்கிய 284 முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டில் குடியுரிமை இல்லாத அமெரிக்க முதலீட்டளர்கள் 36 சதவிகிதமும், ஆசிய முதலீட்டட்டளர்கள் 34 சதவிகிதமும் ஐரோப்பியர்கள் 30 சதவிகிதமும் இதில் அடக்கம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI Bank raises $750 million from sale of overseas bonds

Private sector lender ICICI Bank said today that its Dubai branch has raised $750 million in a 5.5-year overseas bond sale at a coupon of 4.80%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X