டட்ஸன் வாகனங்களை இந்தியாவில் நேரடியாக விற்க திட்டம்!!! நிசான் மோட்டார்ஸ்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நிசான் மோட்டார் நிறுவனத்தினால் உயிர்த்தெழுப்பட்ட பிராண்டாகிய டட்ஸன் நிறுவனத்தை கொண்டு, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் மூலம், நிசான் தயாரிப்பு கார்களை இந்தியாவில் நேரடியாக விற்க களம் இறங்கியுள்ளது. பொதுவாக தனக்கு சொந்தமான பிராண்ட் வாகனங்களை தனிப்பட்ட நிறுவனத்தின் மூலம் விற்பதையே விரும்பக்கூடிய இந்நிறுவனத்தின் வழக்கமான சந்தை உத்திக்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகிறது இந்த அணுகுமுறை.

 

ஜப்பானிய நிறுவனமான நிசான் மட்டுமே, இதுவரை இந்தியாவில் கார்களை சொந்தமாக சந்தைப்படுத்தாத ஒரே நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், நாட்டின் பல பகுதிகளிலும் தனது வாகனங்களை விற்பதற்கும், சப்போர்ட் வழங்குவதற்கும், டீலர் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கித் தருவதற்கும், ஹூவர் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை தன் பிரத்யேக டிஸ்ட்ரிபியூட்டராக உபயோகித்து வருகிறது.

 
டட்ஸன் வாகனங்களை இந்தியாவில் நேரடியாக விற்க திட்டம்!!! நிசான் மோட்டார்ஸ்...

நிசான் அதன் புதிப்பிக்கப்பட்ட டட்ஸன் பிராண்ட்டை ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. டட்ஸன் தொழிர்சாலையில் முதன்முதலில் வெளி வந்திருக்கும் காரான டட்ஸன் கோ, 2014 ஆம் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த கார் சுமார் 4,00,000 ரூபாய்க்கும் (6,420 டாலர்கள்) குறைவான விலையுடன், சுமார் 1.2-லிட்டர் காஸோலின் எஞ்சினை உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் சந்தைகளான இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கென இந்நிறுவனத்தினால் வடிவமைப்பட்ட மலிவு விலை வாகனங்களின் வரிசையில் டட்ஸன் கோ தான் முதல் மாடல் ஆகும். இந்த வரிசையில் ஒரு வேனும் இடம்பிடித்துள்ளது. இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் பங்கு 1.2% என்ற நிலையிலிருந்து 2016 ஆம் ஆண்டிற்குள் சுமார் 10% என்ற நிலையை எட்டுவதற்கு உதவும் என்ற நோக்கில் இந்நிறுவனம் டட்ஸன் பிராண்டின் மீது வர்த்தகம் செய்து வருகிறது.

"டட்ஸன் கோ மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய டட்ஸன் மாடல்களை நிசான் மோட்டார் நிறுவனம் மூலம் விற்பதென்பதும், இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளின் இயற்கையான பரிணாம வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது," என்று டாட்ஸனின் குளோபல் ஹெட், வின்சென்ட் கோபீ கூறியுள்ளார்.

டட்ஸன் வாகனங்களை இந்தியாவில் நேரடியாக விற்க திட்டம்!!! நிசான் மோட்டார்ஸ்...

டட்ஸன் கார்கள், தென்னிந்திய துறைமுக நகரான சென்னைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் கட்டமைக்கப்படவுள்ளன. நிசான் நிறுவனம், டெர்ரானோ என்ற ஸ்போர்ட்-யுட்டிலிட்டி வாகனம், மைக்ரா என்ற பெயரிலான ஸப்காம்பாக்ட் ஹாட்ச்பேக், ஸன்னி என்று பெயரிடப்பட்டுள்ள காம்பாக்ட் கார் மற்றும் இவாலியா என்ற பெயரிலான வேன் போன்றவற்றையும், ஃப்ரான்ஸைச் சேர்ந்த ரினால்ட் எஸ்ஏ என்ற நிறுவனத்துடன் இணைந்து இதே தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது.

நிசான் நிறுவனம், இறக்குமதி செய்யப்பட்ட கார் உதிரி பாகங்களை ஒன்றாக இணைத்து டீனா என்ற ப்ரீமியம் செடான் வகை கார்களையும் உருவாக்கி வருகிறது. மேலும் இந்நிறுவனம், எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி மற்றும் 370இஸட் ஸ்போர்ட்ஸ் கார்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nissan to Sell Datsun Vehicles Directly in India

Nissan Motor Co. will sell vehicles under its resurrected Datsun brand in India directly via dedicated dealerships and company to sell its own brand of vehicles.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X