ப்ளாக்பெர்ரி போன்களின் விற்பனை 0%!!! சோகத்தில் ப்ளாக்பெர்ரி நிறுவனம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மொபைல் உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது நோக்கியா, ப்ளாக்பெர்ரி, மோட்டோரோலா தான். அப்போழுது ப்ளாக்பெர்ரி தான் காஸ்லி போன். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மாட்போன், மற்றும் குகிள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு மென்பொருள் சந்தையில் களம் இறங்கிய பிறகு நோக்கியா, ப்ளாக்பெர்ரி, மோட்டோரோலா நிறுவனங்களின் நிலை தலைகீழாக மாறியது என்ற சொல்லலாம்.

 

இதனால் நோக்கியா, ப்ளாக்பெர்ரி மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் சந்தையில் பெரும் பகுதியை இழந்தது. இது வேலைக்கு ஆகாது தம்பி.. என்பதை உணர்ந்த நோக்கியா மற்றும் மோட்டோரோலா நிறுவனம், நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இனைந்தும் மோட்டோரோலா கூகிள் நிறுவனத்துடன் இனைந்தும் விட்டுப்போன சந்தையை மீண்டும் கைபிடிக்க முயற்சி செய்து வருகிறது.

இப்போது மாட்டிக் கொண்டது ப்ளாக்பெர்ரி நிறுவனம் மட்டும் தான். இந்நிறுவனத்தின் விற்பனை உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் முடங்கியது. மேலும் இந்நிறுவனம் நிதி சுமையில் உள்ளது.

0% விற்பனை

0% விற்பனை

அமெரிக்கா, சீனா, ஸ்பெயின் மற்றும் ஜப்பானில் ப்ளாக்பெர்ரி போன்கள் விற்பனை முற்றிலும் நின்றுபோனதாகவும், விற்பனையில் இங்கிலாந்தில் மட்டுமே தான் தற்போது எஞ்சியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனையில் வீழ்ச்சி

விற்பனையில் வீழ்ச்சி

கண்டார் வோர்ல்ட்பாநெல் காம்டெக் (Kantar Worldpanel ComTech) எனும் அமைப்பின் விவரங்கள் படி, ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் விற்பனை அமெரிக்காவில் 0.8 விழுக்காடும், 0.1 விழுக்காட்டுக்கும் குறைவாக சீனா, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் பதிவாகி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறதாம்.

வீழ்ச்சிக்கான காரணம்
 

வீழ்ச்சிக்கான காரணம்

இந்த வீழ்ச்சி ப்ளாக்பெர்ரி நிறுவனம் ஒரு தனியார் முதலீட்டு அமைப்பிற்கு வர்த்தகத்தை விற்க முயன்றது, இதில் 1 பில்லியன் டாலர்கள் வரை திரட்டிய. மேலும் தன் நிறுவன நிர்வாக அதிகாரியான தொர்ச்டேன் ஹெய்ன்ஸ்-ஐ (Thorsten Heins) பதவியிலிருந்து தூக்கி எரிந்ததாலும் ஏற்பட்ட பின்விளைவு என்று தெரிகிறது.

இங்கிலாந்தில் மட்டும்...

இங்கிலாந்தில் மட்டும்...

இங்கிலாந்தில் இதன் மிகப்பெரும் விற்பனைப் பங்கு 3.3 விழுக்காடு என்று பதிவாகியுள்ள போதிலும், இந்த எண்ணிக்கை எத்தனை பேர் உண்மையாக ப்ளாக்பெர்ரி போன்களை உபயோகிக்கிறார்கள் என்பதை தெரிவிக்காது என அந்த அறிக்கை கூறியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BlackBerry sales drop to nearly zero in US, China, Spain and Japan

BlackBerry sales have reportedly dropped to nearly zero in countries like the United States, China, Spain and Japan, with UK remaining its best-selling area.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X