ஊழலில் இந்தியாவிற்கு 82வது இடமாம்!!! நம்பவே முடியல...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலக புகழ் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலக நாடுகளில் வர்த்தகத்திருக்கு உகந்த நாடு எது என்பதை கண்டறிய சில பல சர்வேகளை நடத்தியது. இதில் இந்தியாவிற்கு கிடைத்திற்கும் இடம் தான் நம்மை பெருமையின் உச்சிக்கே கொண்டு சேர்க்கிறது.

கடந்த வாரம் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட வர்த்தகத்திருக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 98வது இடம் கிடைத்துள்ளது. அதில் வறுமை, ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான வேற்றுமை ஆகியவை உலக நாடுகளின் பெரும் சவால்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பத்திரிக்கை வெளியீட்டில், பிரிக் எனப்படும் நிறுவனமும் இணைந்து இப்பட்டியலிலை வெளியிட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், பிரேசில் உயர்ந்த இடமாக 80 ஆம் இடத்திலும், ரஷ்யா 91வது இடத்திலும், சீனா 94வது இடத்திலும், இந்தியா 98வது இடத்திலும் (அடக் கொடுமையே) உள்ளன. 145 நாடுகளில் சிறந்த நாடுகளை சொத்து உரிமைகள், புதிய கண்டுபிடிப்புகள், வரிக் கொள்கைகள், தொழில்நுட்பம், சுதந்திரம் (தனிமனித, வர்த்தக மற்றும் நிதி), நிர்வாகத் தடைகள், முதலீட்டாளர் நலன் மற்றும் பங்குச்சந்தை நிலவரங்கள் ஆகிய 11 காரணிகளைக் கொண்டு தரம் பிரிக்கப்பட்டன.

முதலிடத்தில் அயர்லாந்து...

முதலிடத்தில் அயர்லாந்து...

இப்பட்டியலில் அயர்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது, உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் நல்ல தொழில் சார் சூழ்நிலையை உருவாக்கி அந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து நியுசிலாந்து 2ஆம் இடத்தையும், ஹாங்காங் தொடர்ந்து இரண்டு வருடமாக 3வது இடத்தை பிடித்துள்ளது.

4,5ஆம் இடம்!!

4,5ஆம் இடம்!!

ஸ்காண்டிநேவிய ராஜாங்கங்களான டென்மார்க் 4வது இடத்தையும், ஸ்வீடன் 5வது இடத்தையும் பிடித்ததுடன் உலகிலேயே அதிகமான தனிமனித உற்பத்தியை கொண்டிருந்தன.

இந்தியா- நேர்மையான நாடு

இந்தியா- நேர்மையான நாடு

இந்தியா ஒரு திறந்தவெளிச் சந்தையாக வளர்ந்துவருகிறது என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளதுடன், வெளிப்பார்வையில், இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சியானது இளம் பருவ மக்கள் தொகை, குறைந்த சார்நிலை விகிதம், ஆரோக்கியமான சேமிப்பு மற்றும் முதலீடு மேலும் உலக பொருளாதாராத்துடனான இணக்கம் ஆகிய காரணங்களால் நேர்மறையாகவே காணப்படுகிறது.

இந்திய கவனிக்க வேண்டியவை!!!

இந்திய கவனிக்க வேண்டியவை!!!

இந்தியா இன்னும் நெடுங்கால சவால்களை சந்திக்கவும் சமாளிக்கவும் வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வறுமை, ஊழல், வன்முறை, பெண்களுக்கெதிரான வேற்றுமை, திறமையற்ற மின் உற்பத்தி மற்றும் பகிர்வு முறைகள், திறமையற்ற அறிவுசார் சொத்துரிமை சட்ட அமலாக்கம், போக்குவரத்து மற்றும் விவசாய அடிப்படை வசதி குறைபாடுகள், குறைந்த விவசாயம் தவிர்த்த வேலை வாய்ப்புகள், தரமான அடிப்படை மற்றும் மேற்படிப்பு வசதிகள் குறைபாடு மற்றும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்தலை நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியாவிற்கு கிடைத்த இடம்

இந்தியாவிற்கு கிடைத்த இடம்

வர்த்தக சுதந்திரத்தில் இந்தியா 128வது இடத்தையும், நிதி சுதந்திரத்தில், 132வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் முறையான சொத்துரிமை (55வது), உக்திகள் (39வது), தொழில்நுட்பம் (94வது), நிர்வாகத் தடைகள் (139வது), முதலீட்டாளர் நலன் (32வது) இடம்.

ஊழல்

ஊழல்

இது போகட்டும் ஊழலில் இந்தியாவிற்கு 86வது இடமாம் இது தான் நம்பமுடியல. ஒரு பக்கம் குழப்பமாக இருந்தலும் மறுபக்கம் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் தனிமனித சுதந்திரம் (58வது), வரிச்சுமை (122வது), சந்தை செயல்பாடு (75வது) ஆகிய இடங்களை இந்தியா பெற்றுள்ளது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

இந்த அறிக்கைக்கான விவரங்கள், ப்ரீடம் ஹவுஸ், ஹெரிடேஜ் பௌண்டேஷன், ப்ராபர்டி ரைட் அலையன்ஸ், ட்ரான்ஸ்பரென்சி இன்டெர்நேஷனல், உலக வங்கி மற்றும் உலக பொருளாதார விவாதக்குழு ஆகிய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Ranks 98th In Forbes List On Best Countries For Biz

India has been ranked 98th in the Forbes list of world's best countries for doing business that has cited poverty, corruption and discrimination against girls among the challenges facing the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X