இந்தியாவில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் வோடாபோன்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வோடபோன் அடுத்த 2 இரண்டு வருட காலத்தில் கிராமப்புறங்களில் அதன் நெட்வொர்கை பெருமளவு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வோடபோன் 3 பில்லியன் டாலர்கள் செலவு செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ரூ.12,000 கோடி அளவிற்கு வரி கட்டும் பிரச்னைகள் இருந்தாலும் வோடபோன் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விட்டோரியோ கோலோ, நிதி அமைச்சர் பா.சிதம்பரத்துடன் நடத்திய 'சுமூக' பேச்சுவார்த்தை பற்றிய தகவல்களை வெளியிட அேவர் மறுத்துவிட்டார்.

'நான் நிதி அமைச்சரை சந்திக்க அவர் எனக்கு அளித்த நேரத்திற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு நிறுவனங்கள் மற்றும் விதிகளை உருவாக்குபவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடப்பது நன்மை தருவதாகும்.' என்று கோலவோ குறிப்பிட்டார். இவற்றை கூறிய கோலோ வோடபோன் 11,200 கோடி வருமான வரியை கட்ட விரும்புகிறதா என்று எழுப்பிய கேள்விக்கு சரியான பதிலை கூறவில்லை.

இந்தியாவில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் வோடாபோன்!!!

வோடபோன் இந்தியா தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் நல்ல ஒத்துழைப்பை தருகிறது என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வோடபோன் 3 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்ய முற்பட்டுளளது என்று கோலயோ கூறினார்.

"இந்நாட்டில் 3 பில்லியன் டாலர்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில், உரிய முறையில் முதலீடு செய்ய முற்பட்டுள்ளது சரியான முடிவு" என்று அவர் குறிப்பிட்டதன் மூலமாக வருமான வரி விவகாரம் தொடர்பான பிரச்சனை இந்தியாவில் வோடபோனின் எதிர்கால திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். 3 பில்லியன் டாலர் முதலீட்டில் அந்நிறுவனம் செலுத்தும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

'முதலவதாக மக்கள் தொகை மற்றும் இதர காரணங்களினால் இந்தியாவிற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நாங்கள் நீண்ட காலத்திற்கு களத்தில் இருப்போம் என்ற முடிவில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நாங்கள் 4 வருடங்களுக்கு மட்டும் இல்லாமல், 20 வருடங்கள் அல்லது அதற்கும் மேலும் இங்கு இருக்க விரும்புகிறோம் என்று கோலவோ கூறினார்.

மேலும் ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகையில் இந்த வரி பிரச்சனைக்கு எல்லாம், வோடபோன் இந்தியாவின் பணியமர்த்தும் திட்டங்களிலும், நெட்வர்க்கை விரிவுபடுத்தும் முயற்சிகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone To Invest $3 Bn In Indian Networks Over Next 2 Years

Not withstanding its nearly 12,000 crore tax dispute with the government, Vodafone plans to invest $ 3 billion in the next two years that will be deployed for network expansion in rural areas.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X