பாரதிய மகிளா வங்கிக்கு போட்டியாக களமிறங்கும் எஸ்பிஐ!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சண்டிகர்: பாரத ஸ்டேட் வங்கி கடந்த செவ்வாயன்று சுமார் 27 அனைத்து மகளிர் வங்கிக்கிளைகளை சண்டிகர் நகரில் திறந்ததுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் முதல் பெண் தலைவராக அருந்ததி பட்டச்சார்யா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதன் முறையாக சண்டிகர் மாநிலத்தின், எஸ்பிஐ நகர தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்ததன் பின்னணியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாரதிய மகிளா வங்கிக்கு போட்டியாக களமிறங்கும் எஸ்பிஐ!!!..

சண்டிகர் தலைமை அலுவலகம் சண்டிகரைத் தவிர்த்து மேலும் நான்கு வட மாநிலங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர், அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றிலுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளை கட்டுப்படுத்தும் அலுவலகம் ஆகும்.

முதல் இந்திய மகளிர் வங்கி துவங்கிய ஒரு மாதத்திற்குள் எஸ்பிஐ இன் இந்த முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்திற்கு ஒரு அனைத்து மகளிர் வங்கி என்ற இலக்குடன் முதலில் இந்த முயற்சி சண்டிகர் வட்டாரத்தில் துவங்கியுள்ளது.

தன்னுடைய தலைமையில், எஸ்பிஐ புதிய உயரங்களை எட்டவும், புதிய முன்மாதிரிகளை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழிவகைகளும் செய்யப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் தலைவர் பட்டச்சார்யா பணியாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI opens 27 all-women branches in Chandigarh

State Bank of India opened 27 all-women branches in Chandigarh on Tuesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X