பங்குச் சந்தை வர்த்தகத்தில் செயல்படும் சில முக்கிய கட்டணங்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பங்குகளை மின்னணு வடிவத்தில் வைக்க தேவைப்படும் டீமாட் கணக்கை திறக்கும் வழிமுறைகளை இன்னமும் எளிதாக மாற்ற செபி (SEBI), பழைய ஒப்பந்த ஆவணத்தை இன்னமும் எளிய குறிச்சொற்கள் அடங்கிய ஒப்பந்த ஆவணமாக மாற்றியுள்ளது. மேலும் டீமாட் கணக்கை திறக்க வசூலிக்கப்படும் பத்திரக் கட்டணங்களும் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தள்ளுபடி டீமாட் கணக்கை திறப்பதற்காக மட்டுமே. அந்த கணக்கின் வாயிலாக பங்குச்சந்தையில் நடக்கும் வணிக வர்த்தகத்திற்கு பத்திரக் கட்டணம் வசூல் செய்யப்படும்.

 

சரி பங்குச் சந்தையின் வணிக வர்த்தகத்தில் (அதாவது பங்குகளை வாங்குவதும் விற்பதும்) ஈடுபடும் போது வசூலிக்கப்படும் கட்டணங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்களேன் தொரிந்துகொள்வோம்..

தரகு கட்டணம் (ப்ரோகரேஜ் பீஸ்)

தரகு கட்டணம் (ப்ரோகரேஜ் பீஸ்)

பங்குகளை வாங்கவும் விற்கவும் இடைநிலையாக செயல்படும் தரகர்களுக்கு தரகு கட்டணம் அல்லது கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் மொத்த வணிக மதிப்பில் இருந்து குறிப்பிட்ட விழுக்காட்டை அவர்களுக்கு கட்டணமாக கொடுக்க வேண்டிவரும். நீங்கள் ஈடுபடும் வணிக அளவை பொறுத்து, உங்கள் தரககத்தில், அவர்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு நீங்கள் பேரம் பேசி கொள்ளவும் செய்யலாம்.

பத்திரக் கட்டணம் (ஸ்டாம்ப் ட்யூடி)

பத்திரக் கட்டணம் (ஸ்டாம்ப் ட்யூடி)

பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பத்திரக் கட்டணம் கட்ட வேண்டி வரும். உங்களின் வர்த்தக மதிப்பில், தற்போது 0.01% பத்திரக் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

சேவை வரி
 

சேவை வரி

குறிப்பிட்ட சேவைக்காக அரசாங்கம் தரகு கட்டணத்தில் இருந்து ஒரு தொகையை வரியாக வசூல் செய்கிறது. இதுவே சேவை வரி. தற்போது சேவை வரியாக 12.36% வசூல் செய்யப்படுகிறது.

பங்கு வர்த்தக வரி (STT)

பங்கு வர்த்தக வரி (STT)

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது STT எனப்படும் பங்கு வர்த்தக வரி வசூலிக்கப்படும். இதன் விகிதத்தை அரசாங்கம் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாற்றிக் கொண்டே வரும். பொதுவாக இந்த வரிக்கான விகிதம் வருடாந்திர பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படும். இந்த வரி விகிதம் பங்குகளின் வகையை பொருத்தும் வர்த்தகத்தின் வகையை பொருத்தும் அமையும்.

0.1% பங்கு வர்த்தக வரி

0.1% பங்கு வர்த்தக வரி

தற்போது ஒப்படைப்பு வகை பங்கு வர்த்தகத்தில், பங்குகளை வாங்கும் போது, அந்த வர்த்தக மதிப்பிலிருந்து (பங்குகளின் எண்ணிக்கையை ஒரு பங்கின் விலையோடு பெருக்கி கிடைக்கும் தொகை) 0.1% பங்கு வர்த்தக வரியாக வசூல் செய்யப்படுகிறது. பங்குகளை விற்கும் போது அதன் விற்பனை தொகையிலிருந்தும் 0.1% பங்கு வர்த்தக வரியாக வசூல் செய்யப்படுகிறது.

வர்த்தக கட்டணம்

வர்த்தக கட்டணம்

சில தரக நிறுவனம் வர்த்தக கட்டணத்தையும் வசூல் செய்கிறது. இந்த சிறிய தொகையானது பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தை பொறுத்து வசூல் செய்யப்படும்.

SEBI கொள்முதல் வரி

SEBI கொள்முதல் வரி

வர்த்தகத்தின் மொத்த மதிப்பில் 0.0001% வசூல் செய்யப்படும் மற்றொரு வரி தான் SEBI கொள்முதல் வரியாகும்.

முடிவுரை

முடிவுரை

பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் இவ்வகையான கட்டணங்கள் அந்த வர்த்தகத்தின் மொத்த மதிப்பில் கழிக்கப்படும் அல்லது சேர்க்கப்படும்; அது நீங்கள் பங்குகளை வாங்குவது அல்லது விற்பதை பொறுத்து மாறுபடும். இந்த கழிதல் அல்லது கூட்டலுக்கு பிறகே வர்த்தகத்தின் நிகரத் தொகை தெரிய வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Different costs associated with stock exchange transactions

In a bid to simplify the procedure for opening the demat account, required to maintain securities in electronic form, Securities and Exchange Board of India (SEBI)
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X